வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

முத்துவை விஜயா வெறுத்து ஒதுக்க காரணம் இதுதான்.. பாட்டியிடம் உண்மையை கேட்டுத் தெரிந்த மீனா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களும் கதையும் பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது. ஆனாலும் இதில் ஆரம்பத்திலிருந்து ஒரு புரியாத புதிராக இருப்பது விஜயா. மற்ற மகன்களிடம் காட்டு பாசத்தை ஏன் முத்துவிடம் காட்ட மறுக்கிறார் என்பதுதான். இதே சந்தேகம் தற்போது மீனாவுக்கும் வந்து விட்டது.

அதனால் பொங்கலை கொண்டாடுவதற்காக கிராமத்திற்கு போன விஜயா குடும்பத்தினர் சந்தோஷமாக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கொண்டாடி வருகிறார்கள். இதற்கு இடையில் விஜயா அங்கே போயும் முத்துவை ஒதுக்கி வைக்கிறார். இதனால் மீனாவிற்கு ரொம்பவே வருத்தமாகிவிட்டது. பிறகு பாட்டியிடம், அத்தை வயிற்றில் இருந்து பிறந்த குழந்தை தான முத்து.

ஆனால் அத்தை ஏன் முத்துவை இப்படி வெறுத்து ஒதுக்குகிறார் என்று கேட்கிறார். அதற்கு பாட்டி தயங்கிய நிலையில், மீனா சொல்ல விருப்பம் இல்லை என்றால் வேண்டாம் என்று சொல்கிறார். உடனே பாட்டி நடந்த உண்மை எல்லாம் சொல்கிறார். அதாவது சின்ன வயசுல மனோஜ் பிறந்த பிறகும் முத்து பிறந்த பிறகும் கிராமத்தில் தான் விஜயா இருந்தார்.

Also read: கிடைக்கிற கேப்பில் ஆட்டைய போட நினைக்கும் விஜயா.. முத்துவிடம் வசமாக சிக்க போகும் ரோகிணி

மனோஜை போலவே முத்து விடவும் பாசத்தை தான் காட்டி வந்தால், ஆனால் சிறு வயதில் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போனதனால் வந்த பிரச்சனை. அதாவது முத்துவிற்கு விஜயா என்றால் ரொம்பவே பிடிக்கும். அம்மாவை யாராவது தப்பா சொல்லிட்டா சண்டைக்கு போய் நிற்பான். அப்படித்தான் முத்து சின்ன வயதில் பசங்க கூட விளையாடும் போது ஒருத்தன் விஜயாவை தப்பா பேசிருக்கிறான்.

இதை கேட்ட முத்து எப்படி எங்க அம்மாவை இப்படி பேசலாம் என்று கத்தி வைத்து குத்திருக்கிறான். அவனுக்கு பெருசா காயம் எதுவுமே ஏற்படவில்லை. ஆனாலும் போலீஸ் வந்து முத்துவை அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டாங்க. பிறகு ஊரில் இருப்பவர்கள் அனைவரும் விஜயாவை திட்ட ஆரம்பித்து விட்டார்கள். பிள்ளையை வளர்க்க தெரியாமல் எந்த லட்சணத்துல வளர்த்திருக்கிறாய் என்று.

அதன் பிறகு தான் விஜயா கிராமத்தில் இருந்து மனோஜை மட்டும் கூட்டிட்டு சென்னைக்கு போய்விட்டார். பிறகு என் கூட தான் முத்து வளர்ந்தான். இந்த உண்மை எதுவும் விஜயாவுக்கு தெரியாது. ஆனால் அவரைப் பொறுத்தவரை முத்து தப்பு பண்ணி இருக்கிறான், ஜெயிலுக்கு போயிருக்கிறான் என்ற காரணத்திற்காக வெறுத்து விட்டால் என்று பாட்டி நடந்த அத்தனை உண்மைகளையும் மீனாவிடம் சொல்கிறார்.

Also read: விஜயாவை ஆட்டிப்படைக்கும் பாட்டி.. கழுவுற தண்ணில நழுவுற மீனாக எஸ்கேப்பாகும் ரோகினி

Trending News