வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நண்பரின் இறப்பால் அஜித்துக்கு வந்த பயம்.. மருத்துவமனை சென்றதன் காரணம் இதுதான்

Actor Ajith: இன்று காலையிலேயே அஜித் குறித்து வந்த செய்தி தான் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கியது. அதாவது திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் வெளியானது. இதை அடுத்து பதறி துடித்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் இது வழக்கமான பரிசோதனை தான் என்றும் உடனே வீடு திரும்பி விடுவார் என்றும் கூறப்பட்டது. உண்மையில் இது வழக்கமான மாஸ்டர் செக்கப் கிடையாதாம், ஹார்ட்டுக்கான பரிசோதனை என்று சொல்லப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இவருடைய நண்பர் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். அதிலிருந்து அஜித்துக்கு ஒரு வித பயம் இருக்கிறதாம். எப்போதுமே சாகசங்களை விரும்பும் இவர் தற்போது தன்னுடைய உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அதனாலேயே இந்த செக்கப் நடந்துள்ளது.

Also read: ரீ-ரிலீஸ் ஆகும் அஜித்தின் 3 மெகா ஹிட் படங்கள்.. பில்லாவை பின்னுக்குத் தள்ளிய கேங்ஸ்டர் படம்

மேலும் அவர் சில மணி நேரங்களிலேயே வீடு திரும்பி விட்டார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நாளை தான் டிஸ்சார்ஜ் ஆகிறாராம். இந்த அவசர பரிசோதனைக்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதாவது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் அஜித் ஜாலியாக பைக் ரைடு செல்ல இருக்கிறார். அதற்காகத்தான் பரிசோதனை செய்திருக்கிறார் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் இந்த மாதம் 15 ஆம் தேதி விடாமுயற்சி சூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் ஆரம்பிக்கப்பட உள்ளதாம்.

அதில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒரு பரிசோதனை செய்து விடலாம் என்று அஜித் அப்பல்லோவுக்கு சென்றிருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் எது உண்மையான காரணம் என்று தெரியவில்லை. ஆனால் அஜித் பூரண நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

Also read: விஜய், அஜித் வாரிசுகளுக்கு போட்டியான குட்டி சூர்யா.. ஜோவை உரித்து வைத்திருக்கும் தியாவின் வைரல் போட்டோ

Trending News