Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல், கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கி கிட்டதட்ட 1300 எபிசோடுக்கு மேல் ஆகி இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த சுவாரசியமும் கதையும் இல்லை என்பதால் சில மாதங்களுக்கு முன்பே இந்த நாடகம் மக்களிடம் தோல்வி அடைந்து விட்டது. அதாவது இந்த நாடகத்தின் கதை மட்டமாக இருக்கிறது அதனால் தயவு செய்து நிறுத்தி விடுங்கள் என்று மக்கள் தொடர்ந்து கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
ஆனாலும் சேனல் தரப்பில் இருந்து பாக்கியலட்சுமி சீரியலை முடிப்பதாக தெரியவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் சேனலை பொறுத்தவரை ஒவ்வொரு சீரியலுக்கும் வருகிற டிஆர்பி ரேட்டிங் தான் மிக முக்கியம். அதனுடைய ரேட் அதிகரித்தால் அந்த நாடகத்தை தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய தான் செய்வார்கள். அதனால் வருகிற நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து கெத்தாக இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். அதனால் தான் இந்த சீரியலை முடிக்க மனமில்லாமல் கதை நல்லா இருக்கோ இல்லையோ எப்படியோ மக்களிடம் கொஞ்சம் ரீச் ஆகி கொண்டு வருகிறது. அதனால் அதை நிறுத்த வேண்டாம் அதன்படியே போகட்டும் என்று கதையை கொண்டு வருகிறார்கள்.
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது அதாவது புத்தம் புது சீரியல்களை விஜய் டிவி நிறைய இறக்கி கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த சீரியல்கள் பெருசாக சொல்லும்படி டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கவில்லை. அதனால் பாக்கியலட்சுமி சீரியலை தூக்கினாலும் அதற்கு பதிலாக புது சீரியல் கொண்டு வந்தாலும் அதுவும் கம்மியான டிஆர்பி ரேட்டிங் தான் கொடுக்கும்.
அதற்கு பேசாமல் பாக்கியலட்சுமி சீரியலை வைத்து ஓட்டலாம் என்பதற்காகத்தான் கதை இருக்கோ இல்லையோ, அரைச்ச மாவையே அரைச்சு வருகிறார்கள். சேனல் தரப்பிலிருந்து யோசிப்பது போலவே இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியல் 6.84 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.