வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஓடும் ரயிலில் ரம்பாவை தாக்கிய லைலா.. மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் பின்னணி

Laila-Rambha: சினிமாவை பொருத்தவரையில் தொழில் ரீதியான போட்டி, பொறாமை ஹீரோக்களுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஹீரோயின்களுக்குள்ளும் ஈகோ கலந்த போட்டி இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு காலத்தில் டாப் ஹீரோயின்களாக இருந்த ரம்பா, லைலா இருவருக்கும் நடந்த மோதல் பற்றிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது ரம்பா தன் சொந்த தயாரிப்பில் த்ரீ ரோசஸ் என்ற படத்தை எடுத்தது அனைவருக்கும் தெரியும். அதில் லைலா, ஜோதிகா இருவரும் ரம்பாவுடன் இணைந்து நடித்திருப்பார்கள். ஒரு நாள் அந்த படத்தின் படப்பிடிப்புக்காக வெளியூருக்கு மூவரும் ட்ரெயினில் சென்று இருக்கின்றனர்.

அப்போது ரம்பா யதார்த்தமாக ட்ரெயின் கதவு பக்கம் வந்து நின்றிருக்கிறார். அப்போது உடன் இருந்த லைலா திடீரென சாமி வந்தது போல் அவரை சரமாரியாக தாக்க ஆரம்பித்து விட்டாராம். இதை எதிர்பார்க்காத ரம்பா நிறுத்து என ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கத்தி இருக்கிறார்.

Also read: இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

ஆனாலும் லைலா அவரை சாத்து சாத்து என சாத்தி இருக்கிறார். உடனே சத்தம் கேட்டு ஜோதிகா மற்றும் சிலர் ஓடி வந்து தடுத்திருக்கின்றனர். இது ரம்பாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு லைலா நடந்து கொண்டாராம்.

ட்ரெயின் படிக்கட்டுக்கு அருகில் இருந்ததால் அவருடைய தாக்குதலில் ரம்பா கீழே விழுந்து விடும் அபாயமும் நேர்ந்திருக்கிறது. ஆனால் மயிரிழையில் அவர் உயிர் தப்பி இருக்கிறார். அதை தொடர்ந்து அப்போதைய பத்திரிகைகளில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் லைலா நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை என விளக்கம் கொடுத்திருந்தார். உண்மையில் பிரபுதேவா, அப்பாஸ் இணைந்து நடித்த விஐபி படத்தில் ரம்பாவுக்கு முன் லைலா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவருடைய அட்ராசிட்டி பொறுக்க முடியாமல் தயாரிப்பாளர் தாணு ரம்பாவை புக் செய்து இருக்கிறார்.

Also read: கவர்ச்சியான போட்டோஸ் போட்டும் 10 பைசா பிரயோஜனம் இல்லாமல் போன 5 நடிகைகள்.. கூச்சமே இல்லாத மீரா ஜாஸ்மின்

ஆனால் லைலா வேண்டுமென்றே ரம்பா தனக்கு கிடைக்க இருந்த வாய்ப்பை பிடுங்கி விட்டதாக தவறாக நினைத்து இருக்கிறார். அதனால் தான் இப்படி ஒரு தாக்குதல் நடந்ததாக ஒரு பேச்சு இருக்கிறது. மேலும் ரம்பா பலமுறை பேட்டிகளில் லைலாவை தனக்கு பிடிக்காது என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு உயர் பயத்தை காட்டி இருக்கிறார் சிரிப்பழகி லைலா.

Trending News