சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

புளியங்கொம்பை பிடித்த சீரியல் நடிகை மகாலட்சுமி.. முதல் கணவரை பிரிய இதுதான் காரணம்

நேற்று யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் மகாலட்சுமி சின்னத்திரையில் நடிக்கும்போதே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அந்தச் சமயத்தில் மகாலட்சுமி அனில் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : தயாரிப்பாளரை 2ம் திருமணம் செய்த சன் டிவி மகாலட்சுமி.. திருமண புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் கணவன் உடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 2019-ல் விவாகரத்து பெற்ற தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார் மகாலட்சுமி. இதனால் சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்து சில தொடர்களில் நடித்து வந்தார்.

அதுவரை சர்ச்சையில் சிக்காத மகாலட்சுமி சின்னத்திரை நடிகர் ஈஸ்வரன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ, தனது கணவருடன் மகாலட்சுமி பழகி வருவதாக போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் நாங்கள் நண்பர்களாக தான் பழகி வருகிறோம் என மகாலட்சுமி கூறியிருந்தார்.

Also Read : சன் டிவி சீரியல் புகழ் மகாலட்சுமியா இது? இப்போது வைரலாகும் பழைய புகைப்படம்

இதைத்தொடர்ந்த சிறிது காலம் சீரியலில் நடிக்காமல் இருந்த மகாலட்சுமி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா என்ற தொடரில் நடித்து வருகிறார். தற்போது திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் மகாலட்சுமி.

பிடித்தாலும் புளியங்கொம்பாய் பிடித்துள்ளார் மகாலட்சுமி என பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள். தன்னைவிட அதிக வயதுடையவரை திருமணம் செய்வது கொள்வதற்கான காரணம் பணம் தான் எனக் கூறுகின்றனர். ஆனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உள்ள சிலர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் மாறிப்போன மகாலட்சுமி.. வைரலாகும் புகைப்படம்!

Trending News