வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சொந்தத்தில் திருமணம் செய்தும் நடந்த விவாகரத்து.. முதல் கணவரை பிரபு மகள் பிரிய காரணம் இதுதான்

Prabhu Daughter’s First Marriage: பழம்பெரும் ஜாம்பவான் சிவாஜியின் குடும்பம் தான் திரையுலகை பொருத்தவரையில் பெரிய குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வீட்டு வாரிசான பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை நேற்று கரம் பிடித்தார்.

இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அந்த போட்டோக்கள் மீடியாவில் வைரலான நிலையில் ரசிகர்களும் இந்த தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் குறித்த ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். முதலில் பிரபு தன் மகளை சொந்த சகோதரி தேன் குழலியின் மகன் குணாலுக்கு தான் மணமுடித்து இருந்தார். ஆனால் கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் பிரிந்து விட்டனர்.

Also read: சிவாஜி வீட்டு மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன்.. கோலாகலமாக நடந்த திருமணம், வைரல் புகைப்படங்கள்

காரணம் சிவாஜியின் சொத்துக்களை மகள்களுக்கு சரியாகப் பிரித்துக் கொடுக்காததால் சிறு மனக்கசப்பு இருந்திருக்கிறது. அதன் காரணமாக தேன் குழலி பிரபுவிடம் பேசாமல் இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து குணாலும் தன் அம்மா பக்கமே ஆதரவாக இருந்திருக்கிறார்.

இது வழக்கு தொடுக்கும் அளவுக்கு கூட சென்றது. மேலும் குணால் வெளிநாட்டிலிருந்து இந்தியா பக்கமே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாகிவிடவே ஐஸ்வர்யா கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். அதன் பிறகு ஆதிக்குடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு அது காதலில் முடிந்திருக்கிறது.

இந்த காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் நேற்று இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து இருக்கின்றனர். முன்னதாக பிரபு சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் சொந்தத்தில் மகளை மணமுடித்தார் என்று பேசப்பட்டது. தற்போது பயில்வான் கூறியதை பார்க்கும்போது அது உண்மை என தெரிகிறது.

Also read: கோலிவுட் கொண்டாடிய ஆதிக் கல்யாணம்.. ஹீரோயின் லுக்கில் செமையா வந்த அஜித், ஷாலினியின் மகள்

Trending News