R.J.Balaji: ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்த மூக்குத்தி அம்மன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா அம்மனாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வரப்போகிறது.
அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி இதில் ஹீரோ கிடையாது என்பது தான் ஆச்சரியம். ஆனால் இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஆர்ஜே பாலாஜி த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்தது.
அது உறுதியாகும் முன்பே மூக்குத்தி அம்மன் 2 பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்குப் பின் ஏதேனும் காரணம் இருக்குமா? என்று கூட சலசலக்கப்பட்டது. அதன்படி ஆர் ஜே பாலாஜி இப்படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஆர் ஜே பாலாஜி போட்ட கண்டிஷன்
தற்போது ஹீரோவாக நடித்து வரும் ஆர் ஜே பாலாஜிக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தார். அவருடைய தயாரிப்பில் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தார்.
அப்படி இருந்தும் கூட இப்படத்தில் அவர் இல்லாமல் போனதற்கு சம்பளம் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க 8 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார்.
இதில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிசினசின் ஒரு பகுதியையும் சேர்த்து தான் இந்த 8 கோடி ரூபாய். அதனாலேயே ஐசரி கணேஷ் வேறு ஹீரோவை போடலாம் என முடிவு செய்து ஆர் ஜே பாலாஜியை கழட்டி விட்டுள்ளார்.
இந்த சங்கதி தான் இப்போது திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் போது உட்கார இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் கதையாக இருக்கிறது. இதுதான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பதா என திரையுலகில் பேசி வருகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2
- ஆர் ஜே பாலாஜி இல்லாத மூக்குத்தி அம்மன் 2?
- மூக்குத்தி அம்மனாக மாறி முகம் சிவந்த நயன்தாரா
- தனக்குத்தானே ஆப்பு வைத்த RJ பாலாஜி