Sivaji: நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்திற்கென திரையுலகில் பெரும் மரியாதை இருக்கிறது. ஆனால் சமீப காலமாக பரவி வரும் செய்திகள் அவருடைய பெயரை கெடுப்பதாக இருக்கிறது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவக்குமார் சிவாஜியின் பேரன் என்ற செய்தி இப்போது பரவ ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே இது குறித்து பலருக்கும் தெரியும்.
நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரியை தான் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ரகசிய திருமணம் செய்து வாழ்ந்திருக்கிறார். ஆனால் அதை அவர் எந்த இடத்திலும் பகிரங்கப்படுத்தவில்லை.
அதேபோல் சிவகுமார் தன் மகன் என்ற அங்கீகாரத்தையும் அவர் கொடுக்கவில்லை. இந்த செய்தி தற்போது பரவி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சேகுவாரா தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிவாஜி பெயரை கெடுக்கும் வாரிசு
சிவக்குமார் சிவாஜியின் பேரன் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. அப்படி இருக்கும்போது ராம்குமார் அதை வெளியில் சொல்வதில் என்ன தயக்கம்.
இதனால் அவருடைய பெயர் கெடவில்லை சிவாஜியின் பெயர் தான் கெட்டுப் போகிறது. சிவகுமாரை தன் மகன் என அறிவிக்காததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
எங்கு அவர் தன் சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுவாரோ என்றார் பயம் தான். ஏனென்றால் பிரபு நடித்து சொந்த சம்பாத்தியத்தில் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
ஆனால் ராம்குமார் அப்பாவின் சொத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதிலும் இவர் பங்கு கேட்பாரோ என்று தான் உரிமையை கொடுக்கவில்லை.
ஆனால் சிவகுமாருக்கு சொத்து வேண்டாம் மகன் என்ற அங்கீகாரம் தான் வேண்டும். அதை ராம்குமார் செய்ய வேண்டும் என சேகுவாரா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.