வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிங்க பெண்ணே முதலிடத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம்.. ஷாஜகான் விஜய் போல் மாறப்போகும் அன்பு

Singapennae Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்க பெண்ணே சீரியல், ஆரம்பித்த நாள் முதல் இப்பொழுது வரை டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து மக்களின் ஃபேவரைட் சீரியலாக இருக்கிறது. அதற்கு காரணம் அன்பு மற்றும் மகேஷின் எதார்த்தமான நடிப்பும் மக்களை ஈர்க்கும் வகையில் காதல் மற்றும் ரொமாண்டிக் அதிகமாக இருப்பதினால் தான்.

அதாவது மகேஷின் உண்மையான காதலும், அன்புவின் அக்கறையான பாசமான காதலுக்கும் நடுவில் ஆனந்தியின் வெள்ளந்தியான நடிப்பு ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களை குஷிபடுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆனந்தி மனதிற்குள் அன்பு ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனாலும் அழகன் யார் என்று தெரியாமலேயே ஆனந்தி கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பித்து விட்டார்.

இதில் அன்பு தான் அழகன் என்றால் இவர்களுடைய காதல் வெற்றி அடைந்து விடும். ஆனால் இங்கேதான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. புதிதாக வந்த நந்தா, ஆனந்தியை அன்புக்கும் மகேசுக்கும் கிடைக்க விடாமல் தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலையை பார்த்து வருகிறார்.

ஆனந்தி மனதிற்குள் இடம் பிடித்த அன்பு

இந்நிலையில் மகேஷின் காதலுக்கு அன்பு ஒவ்வொரு ஐடியாவையும் கொடுத்து காதலை வலுப்படுத்தி வருகிறார். ஆனால் மகேஷ் காதலிப்பது ஆனந்தி தான் என்று தெரியாமல், ஷாஜகான் படத்தில் விஜய் எப்படி நண்பன் காதலுக்கு உதவி செய்து அவருடைய காதலை இழந்தாரோ, அது போல் தான் தற்போது கதை நகர்ந்து வருகிறது.

அந்த வகையில் தியாகி மாதிரி அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் காதலுக்கு தூதுவாக இருந்து ஒன்று சேர்த்து வைக்கப் போகிறார். இதற்கிடையில் மித்ரா மற்றும் நந்தாவின் சூழ்ச்சியில் இருந்து எப்படி ஆனந்தி தப்பித்து குடும்பத்தை கரை சேர்க்க போகிறார் என்பது தான் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக அமைந்து வருகிறது.

ஆனால் தற்போது வந்த ப்ரோமோ படி ஆனந்தி மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக அன்பு இடம் பிடித்து வருகிறார். ஒருவேளை அழகன் அன்பு இருவருமே ஒருவர்தான் என்று ஆனந்திக்கு தெரிந்து விட்டால் கதை இன்னும் பயங்கரமாக சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Trending News