வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கோலிவுட்டில் ஹீரோவுக்கா பஞ்சம்? வெற்றிமாறன் சூரியை நாயகன் ஆக்கியதன் காரணம் இது தானாம்

கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.  வெற்றிமாறன் இயக்கத்தில்  வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். இதனால் பல நடிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் என்பதை தங்களது லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஏனென்றால், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி, அதில் வெற்றி காண்பதில் வெற்றிமாறன் கைதேர்ந்தவர்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் பிரபல காமெடி நடிகரான சூரி கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் வெற்றிமாறன் சூரியை எதற்காக கதாநாயகனாக தேர்வு செய்தார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது வெற்றிமாறனின் இயக்கத்தில் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க தயாராக இருக்கும் நிலையில், வெற்றிமாறன் எதற்காக சூரியை தேர்வு செய்தார் என்ற கேள்வி பல தரப்பினரிடையே நிலவி வந்தது. தற்போது இதற்கான காரணம் தெரிந்துள்ளது. அதோடு இந்தத் தகவல் தற்போது வைரலாகியும் வருகிறது.

அது என்னவென்றால், சூரி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒரு மாஸ் ஹீரோ கதை இல்லையாம். மேலும் பலூன் விற்று தனது குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றும் ஒருவரின் வாழ்வின் எதார்த்தங்களை பற்றி பேசும் கதையாம். இதனால்தான் இந்த கதைக்கு சூரியை தேர்வு செய்தாராம் வெற்றிமாறன்.

soori-vetrimaran-cinemapettai
soori-vetrimaran-cinemapettai

இவ்வாறு தனது கதைக்குப் பொருந்தும் நடிகர்களை தேர்வு செய்வதால்தான் வெற்றிமாறனின் படங்கள் அனைத்தும் ஹிட் ஆகின்றன  என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending News