ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அம்மாவாக விக்ரமுடன் நடிக்க மறுத்த திரிஷா.. ஆனா விஜய்க்கு ஒத்துக்கிட்ட காரணம் இதுதான்

Trisha: நடிகை த்ரிஷாவிற்கு சினிமாவில் 21 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக முன்னணியில் நடித்து வரும் அதிர்ஷ்டம் இவருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். எத்தனையோ நடிகைகள் பல வருடங்களாக சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்தாலும் இவரை மாதிரி யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை.

இடைப்பட்ட காலத்தில் பல தோல்விகளை சந்தித்து துவண்டு போயிருந்தாலும் செகண்ட் இன்னிங்ஸில் மறுபடியும் இவருக்கான இடத்தை பிடித்து விட்டார். அந்த வகையில் தற்போது இருக்கும் அனைத்து ஹீரோயின்களையும் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு பிஸியாக உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.

இடையில் இவருக்கு விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் திரிஷா அதை ஒரேடியாக மறுத்துவிட்டார். காரணம் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் கர்ப்பமாக இருப்பது போலும், அம்மா கேரக்டரும் இருப்பதினால் அந்த கேரக்டருக்கு நோ சொல்லிவிட்டார். அப்படி விக்ரமுக்கு நோ சொல்லிய த்ரிஷா தற்போது லியோ படத்தில் விஜய்க்கு மட்டும் மனைவியாகவும் இரண்டு குழந்தைக்கு தாயாகவும் நடிப்பதற்கு ஒத்துக்கிட்டதற்கு காரணம் என்னவாக இருக்கும்.

Also read: ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!

அதாவது விஜய் கூட எப்பொழுதுமே நடித்தால் திரிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். அதே சமயத்தில் லோகேஷ் கூட்டணியில் இணைந்தாலும் த்ரிஷா அடுத்த கட்ட லெவலுக்கு போவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடிக்காமல் போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

அதாவது அந்த சமயத்தில் விக்ரம் பல படங்களில் தோல்வியை மட்டும் சந்தித்து வந்தார். அதனால் அவருடைய மார்க்கெட் ரேட்டும் டவுன் ஆகி இருந்தது. அந்த நேரத்தில் இவருடன் இணைந்து நடித்து விட்டால் நம்முடைய லெவல் கம்மியாகிவிடும் என்ற ஒரு பயத்தினாலும் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பதற்கு மறுத்திருக்கிறார்.

எப்போதுமே த்ரிஷாவுக்கு விஜய் என்றால் ஒரு தனி இடம் உண்டு. அத்துடன் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நல்லாவே ஒர்க் அவுட் ஆகும். அதுதான் திரிஷாவின் வெற்றிக்கு சீக்ரெட் ஆகவும் இருக்கிறது. இதை நாம் லியோ படத்திலேயே பார்க்க முடிந்தது.

Also read: ரஜினியின் 10 ஹேர் ஸ்டைலை உருவாக்கிய விஜய்யின் தம்பி.. இப்ப வரை பெருமை பேசும் தருணம்

Trending News