செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆரம்பிக்கும் முன்பே அமுங்கி போன பதவி ஆசை.. அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய், காரணம் இதுதான்

Vijay Politics: விஜய் எப்போது தன்னுடைய அரசியல் அறிவிப்பை கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் கட்சியின் பெயரை தேர்ந்தெடுக்கும் வேலைகளும் சத்தம் இல்லாமல் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு முழுக்கு போடப் போவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இப்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிப்பதற்கு சம்மதித்திருக்கிறாராம்.

அதன்படி ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளருக்கு விஜய் ஓகே சொல்லி இருக்கிறார். அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பதற்கும் சம்மதித்திருக்கிறார். இப்படி இரண்டு படங்களில் நடிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட அவர் அரசியல் ஆசையை சிறிது காலம் ஒத்தி வைக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

Also read: அர்ஜுன் இயக்கிய லாபமும் நஷ்டமும் அடைந்த படங்கள்.. 60 வயதிலும் லியோ சித்தப்பா செய்யும் அக்கப்போரு!

ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே இவருடைய படங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலையீடு அதிகமாக இருந்திருக்கிறது. அதில் திமுக, அதிமுக, பிஜேபி என பல தரப்பில் இருந்தும் அவருக்கு கஷ்டங்கள் வந்திருக்கிறது. அதையெல்லாம் விஜய் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்.

மேலும் தற்போது அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்த தலைவர்கள் இவருக்கு சில அறிவுரைகளையும் கூறியிருக்கிறார்களாம். நீங்கள் இப்போது சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறீர்கள். அரசியலுக்கு வந்தால் அந்த இமேஜ் கெட்டுப் போய்விடும்.

அரசியலிலும் ஜொலிக்க முடியாமல் சினிமாவிலும் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதனால் இப்போதைக்கு நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் தற்போது விஜய் அரசியல் ஆசையை ஓரங்கட்டி சினிமாவில் கவனம் செலுத்தும் முடிவில் இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

Also read: விஜய் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா.? ஒரு ஓட்டு கூட தேறாது, எச்சரிக்கும் விசுவாசிகள்

Trending News