வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

2 படங்களால் மொத்த சொத்தையும் அழித்த வெங்கட் பிரபு.. GOAT படத்தை விஜய் இழுத்தடித்த காரணம்

Vijay-Venkat Prabhu: விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் The Greatest Of All Time மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இவர்களுடைய கூட்டணி எப்போது அமையும் என காத்திருந்த ரசிகர்கள் இப்போது படத்தை கொண்டாடுவதற்கு தயாராகி இருக்கின்றனர்.

ஆனால் எப்போதோ உருவாகி இருக்க வேண்டிய இந்த கூட்டணியை விஜய் தான் சில காரணங்களால் இழுத்தடித்து வந்திருக்கிறார். ஏனென்றால் வெங்கட் பிரபுவின் மாநாடு வெற்றி அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

ஆனால் அதற்கு அடுத்ததாக வெளிவந்த மன்மத லீலை, கஸ்டடி ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதில் மன்மத லீலை கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதேபோன்று வெங்கட் பிரபு கடைசியாக தயாரித்த இரண்டு படங்களும் சரியாக போகவில்லை.

Also read: விஜய் 69 க்கு மல்லுக்கட்டும் தயாரிப்பு நிறுவனங்கள்.. தங்க வேட்டைக்கு தயாராகும் 4 பெருந்தலைகள்

அந்த வகையில் ஆர் கே நகர், கசடதபற ஆகிய படங்கள் அவருக்கு கடும் நஷ்டத்தை தான் கொடுத்தது. இதனால் பெரும் அடி வாங்கிய வெங்கட் பிரபு எப்படியாவது விஜய்யின் கால்சீட்டை பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார்.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து சரியான பதில் வராமல் இருந்திருக்கிறது. ஏனென்றால் தோல்வி படங்களை கொடுத்த இயக்குனருடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என விஜய் கடும் யோசனையில் இருந்திருக்கிறார்.

ஆனாலும் மனம் தளராத வெங்கட் பிரபு எப்படியோ கதையை சொல்லி அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு அனைத்து வேலைகளும் அடுத்தடுத்து நடைபெற்று இப்போது படப்பிடிப்பும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Also read: ரஜினியை நம்புறது வேஸ்ட்.. விஜய்யின் அரசியல் என்ட்ரியால் முக்கிய நடிகருக்கு வலை வீசும் ஆளும் கட்சி

Trending News