ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

எஸ்ஏசியை விஜய் ஒதுக்க இதுதான் காரணம்.. இந்த வயசிலையும் தளபதிகிட்ட அத எதிர்பார்த்தது தப்பு

விஜய் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறி உள்ளார். இப்போது அவருடைய வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது அவருடைய அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தான். பிரபல இயக்குனராக இருந்த அவர் தனது மகனை நடிகன் ஆக்க வேண்டும் என போராடினார்.

இதற்காக தனது சொந்த இயக்கத்திலேயே இரண்டு, மூன்று படங்களை விஜய் வைத்து இயக்கினார். அந்த படங்கள் தொடர் தோல்வியை தர அப்போது டாப் ஸ்டாராக இருந்த விஜயகாந்தின் படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார். அதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

Also Read : அஜித்தின் சென்டிமென்ட்டுக்கு ஆப்பு வைத்த வாரிசு.. துணிவுக்கு ஷாக் கொடுத்த விஜய்

இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களாக விஜய் தனது பெற்றோர்களிடம் இருந்து விலகி உள்ளார். இதற்கு காரணம் இவர்கள் இடையே சரியான புரிதல் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 70% உண்மையும் இருக்கிறது.

அதாவது விஜய் இப்போது தனியாக நீலாங்கரை வீட்டில் வசித்து வருகிறார். தனது பெற்றோர்களை பார்ப்பதும், பேசுவதும் இல்லையாம். இது குறித்து எஸ்ஏசி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது விஜய்யை நான் 5 வயதில் பார்த்தது போல 35 வயதிலும் பார்த்துவிட்டேன்.

Also Read : நீயா நானா போட்டியில் துணிவுக்கு விட்டுக் கொடுத்த வாரிசு விஜய்.. உறுதியான ரிலீஸ் தேதி

அதுதான் நான் செய்த மிக பெரிய தவறு. அதாவது ஐந்து வயதில் நாம் சொல்வதை குழந்தைகள் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் 35 வயதில் சொல்லி கொடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை என்பதை எஸ்ஏசி ஒத்துக் கொண்டார். இதுதான் இவர்களது பிளவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து வெளிப்படையாக எந்த ஒரு மேடையிலும் கூறியது இல்லை. ஆனாலும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் அவரது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அங்கு விஜய் அவர்களை பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. மேலும் விரைவில் விஜய் தனது பெற்றோர்களுடன் சேர வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Also Read : சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு குழாயடி சண்டை போடும் ஹீரோயின்கள்.. விஜய், அஜித்தையும் மிஞ்சிய தகராறு

Trending News