செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கேப்டன்னு சும்மாவா சொல்றாங்க.. விஜயகாந்த் கொண்டாடப்படுவதற்கான காரணம் இதுதான்

நடிப்பு, அரசியல் என பம்பரமாக சுழன்று கொண்டிருந்த விஜயகாந்த் தற்போது உடல்நல குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஆனாலும் அவர் திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்படும் ஒருவராகவே இருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய புகழ் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கேப்டன் என்று அவரை யாரும் சும்மா கொண்டாடவில்லை. அதற்கு வலுவான பல காரணங்கள் இருக்கிறது. அதாவது விஜயகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் கலகலப்பான மனிதராக இருப்பாராம். அதிலும் நடிகர், நடிகைகள் முதல் டெக்னீசியன்கள் வரை அனைவரிடமும் எதார்த்தமாக பழக கூடிய தங்க மனசுக்காரர்.

Also read: ஒரே வருடத்தில் அதிக படங்கள் வெளியிட்ட 5 ஹீரோக்கள்.. உச்ச நடிகர்களை மிரள செய்த விஜயகாந்த், மோகன்

அது மட்டுமல்லாமல் சினிமா தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தை பற்றிய விவரங்கள் அனைத்தையும் அவர் தெரிந்து வைத்துக் கொள்வாராம். அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு சம்பந்தமான விஷயங்களையும் அடிக்கடி கேட்டு விசாரித்து பல உதவிகளையும் செய்து இருக்கிறார். அதிலும் துணை நடிகர்களுக்கு இவர் செய்த உதவிகள் கணக்கில் அடங்காதது.

அதனால் தான் அனைவரும் தங்கள் வீட்டில் எந்த நல்லது நடந்தாலும் விஜயகாந்தை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்போதும் கூட அவரை எப்போது பொதுவெளியில் பார்ப்போம் என்று பலரும் காத்திருக்கின்றனர். மேலும் விஜயகாந்த் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய சிறப்பம்சமும் இருக்கிறது.

Also read: எம்ஜிஆர், விஜயகாந்த் போல உதவி செய்த வாரிசு நடிகை.. ஒரு கோடிக்கு தங்க காசுனா சும்மாவா!

என்னவென்றால் ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் மேன், காஸ்டியூம் டிசைனர் போன்றவர்களுக்கு அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்புகள் கொடுப்பாராம். அப்படி இல்லை என்றால் அவர்களுடைய அசிஸ்டன்ட் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவாராம். இதன் மூலம் அவர்களை எல்லாம் திரைத்துறையில் ஒரு அந்தஸ்திற்கு கொண்டு சென்ற பெருமையும் அவருக்கு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நடிகர் சங்க தலைவராக இவர் இருந்த காலம் தான் பொற்காலம் என்று இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. அது யாராலும் மறுக்க முடியாத உண்மையும் கூட. அந்த அளவிற்கு அவர் அனைவரையும் கை தூக்கி விட்டு அழகு பார்த்திருக்கிறார். இப்படிப்பட்ட காரணங்களால் தான் அவரை பலரும் கேப்டன் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Also read: விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

Trending News