திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அப்பாவின் செயல் கொஞ்சம் கூட மகனிடம் இல்லை.. ரஜினி, கமல் படங்களுக்கு யுவன் இசையமைக்காத காரணம் இது தான்

அன்றைய காலமான 60லிருந்து 80,90 காலக்கட்டங்கள் வரை தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பெரும்பாலும் ஒரே இயக்குனர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என தொடர் படங்களில் நடித்து வருவதை வழக்கமாகவும்,ஒரு பழக்கமாகவும் கொண்டுள்ளனர். அதற்கான காரணம் அவர்கள் படங்கள் நடிப்பதை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்களுடன் பழகி நட்புறவை வளர்த்துக்கொள்வர்.

ஆனால் இந்த பழக்கம் தற்போதுள்ள காலத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முன்னணி நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்கள் வரை ஒவ்வொரு படங்களுக்கும் வெவ்வேறு இயக்குனர்கள், வெவ்வேறு நடிகைகள், வெவேறு இசையமைப்பாளர்கள் என மாறி மாறி நடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் எல்லோரும் பரபரப்பான வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள். அன்றைய கால இயக்குனர்கள் ஒரு படத்தை இயக்க சில மாதங்கள் கதை எழுதினால் போதுமானது.

Also Read: புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

ஆனால் இப்போது ஒரு படத்தின் கதை எழுத வெளிநாடுகளுக்கு செல்வது, நடிகர்களின் மார்க்கெட்டுக்கு ஏற்றவாறு படங்களை இயக்குவது என படு பிசியாக உள்ளனர். இவர்களாவது பரவாயில்லை நடிகர்கள் இவர்களுக்கும் ஒருபடி மேல் உள்ளனர் எனலாம், ஒரு படம் முடித்தவுடன் வேறு இயக்குனர்களை அணுகி கதையை கேட்டு அப்படத்தில் நடித்து வரும் பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான நிலையால் ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் வாரிசு இசையமைப்பாளரிடம் தற்போது வரை ஒரு படத்தில் கூட இணையாமல் உள்ளனர். ரஜினிகாந்த், கமலஹாசனின் இருவரின் படங்களில் இளையராஜா முதல் அனிருத் வரை இசையமைத்துள்ளனர். அதிலும் 80 காலக்கட்ட பெரும்பாலான படங்களில் இசைஞானி இளையராஜாவின் இசை தான் இருக்கும்.

Also Read: வரிசையாக கதை கேட்கும் ரஜினிகாந்த்.. அடுத்த படத்தை இயக்க காத்திருக்கும் 5 இயக்குனர்கள்

அதேபோல பொது இடங்கள் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை இளையராஜாவுடன் நட்புடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவரது இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா திரையில் இசையமைக்க வந்து 25 ஆண்டுகளாகியும் இப்போது வரை ரஜினி கமல் உள்ளிட்டோரின் ஒரு படத்தில் கூட இசையமைக்கவில்லை.

யுவன் ஷங்கர் ராஜா அஜித், சூர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இளைஞர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வருபவர். ஆனால் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் படங்களுக்கு மட்டும் தற்போது வரை இசையமைக்காமல் உள்ளதற்கான காரணம் அண்மையில் வெளியாகியுள்ளது. இதற்கான காரணங்கள் பல விஷயங்களை சொன்னாலும், இளையராஜா அளவிற்கு யுவன் ஷங்கர் ராஜா இருவரிடமும் பழகவில்லை நட்பாக பழகவில்லை என்பது தான்.

Also Read: இளையராஜா இல்லாமல் ஹிட் கொடுத்த 5 இயக்குனர்கள்.. சுத்தமாகவே கண்டு கொள்ளாத ஷங்கர்

Trending News