தளபதி-68 படத்தின் ரிலீஸ் தேதி இதுதானாம்.? இரண்டு நாட்களை குறி வைத்த விஜய்

Thalapathy 68
Thalapathy 68

Release date of Thalapathy 68: லியோ படத்திற்குப் பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அதிலும் விறுவிறுப்பாக நடைபெறும் தளபதி 68 படப்பிடிப்பு நிறைவடைந்த பின், அதன் ரிலீஸ் தேதி எப்போது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தளபதி 68 படத்தை இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ரிலீஸ் செய்யலாம் என்று குறி வைத்திருக்கின்றனர். ஏற்கனவே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31ஆம் தேதி மாலை வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல இந்த படம் ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் இருந்து ரீமேக் என்றும் தகவல் வெளியானது. மேலும் தளபதி 68 படம் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பக்கா ஆக்சன் படமாக தயாராகிறது. இதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கெட்டப் போட்டு இருக்கிறார்.

Also Read: 2024ல் ஏப்ரல் வரை ரிலீஸ் ஆக உள்ள 13 டாப் பட்ஜெட் படங்கள்.. அதிக வசூலை அள்ள போகும் படம் இதுதான்

தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி இதான்

மகனாக நடிக்கும் விஜய் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக நடிக்கிறார். இதில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவர்களுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, அஜ்மல், லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல தளபதி 68 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து அடுத்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை அந்த தேதி மிஸ் ஆனால், அடுத்து விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி தளபதி 68 படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கின்றனர்.

Also Read: அஜித்திடம் இருக்கும் தரமான குணம்.. இதை மட்டும் கத்துக்கிட்டா விஜய் தான் அடுத்த CM

Advertisement Amazon Prime Banner