வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கூலி படத்துக்காக லோகேஷுக்கு கொட்டி கொடுத்த சன் பிக்சர்ஸ்.. நிரம்பி வழியும் லோகியின் கஜானா

Lokesh: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரின் கூலி டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல சர்ப்ரைஸ் விஷயங்களை லோகேஷ் காட்டி இருந்தார்.

ரஜினியின் 80 காலங்களை நினைவுபடுத்தும் வகையில் டிஸ்கோ பாடலும் வேற லெவலில் இருந்தது. இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சன் பிக்சர்ஸ் அவருக்கு 60 கோடி சம்பளத்தை கொட்டி கொடுத்துள்ளனர்.

கூலி படத்துக்காக லோகேஷின் சம்பளம்

இதற்கு முன்னதாக லியோ படத்துக்காக லோகேஷ் 50 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அதையடுத்து இப்போது அவர் அதிகபட்ச சம்பளம் வாங்கி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

இப்பவே சன் பிக்சர்ஸ் இவ்வளவு சம்பளத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் படம் வெளியாகி வசூலை வாரி குவித்தால் சன் பிக்சர்ஸ் அதிலிருந்து ஒரு பங்கு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏற்கனவே ரசிகர்கள் படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என மார் தட்டி வருகின்றனர். அதற்கேற்றார் போல் தயாரிப்பு தரப்பும் கணக்கு பார்க்காமல் காசை தண்ணியாக செலவழித்து வருகின்றனர்.

Trending News