ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பெண் மோகத்தில் நடக்கும் அநீதியை துணிச்சலாக கையிலெடுத்த மோகன்ஜி.. பகாசூரன் கதை இதுதான்

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. அதாவது திரௌபதி என்ற படத்தில் நாடக காதல் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார். இப்படத்திற்கு பாராட்டுக்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இதைத்தொடர்ந்த ருத்ர தாண்டவம் என்ற படத்தை எடுத்திருந்தார்.

தற்போது செல்வராகவன், நட்டி நட்ராஜ் ஆகியோரை வைத்து பாகசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் மன்சூர் அலிகான் ஆடி உள்ள ஒரு பாடல் வெளியாக இருந்தது.

Also Read : புது அவதாரம் எடுத்த செல்வராகவன்.. மொத்த கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்

மேலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பாகசூரன் படம் எதைப் பற்றிய கதைக்களம் என்பதை மோகன்ஜி வெளிப்படுத்தி உள்ளார். அதாவது கல்லூரி படிக்கும் பெண்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வரும் பெண்கள் என பலரும் மசாஜ் பார்லர்கள் மற்றும் ஸ்பா ஆகியவற்றில் எவ்வாறு சிக்குகிறார்கள் என்பதை பற்றிய கதைக்களம் தான்.

சமீபகாலமாக மசாஜ் பார்லர் உள்ளிட்ட இடங்கள் விபச்சார விடுதிகளாக மாறி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் மோகன் ஜி இதை துணிச்சலாக கையிலெடுத்தால் கண்டிப்பாக இந்த படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளடக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் மோகன் ஜி.. பகாசுரனில் மிரட்டும் செல்வராகவன்

மேலும் செல்வராகவன் தற்போது இயக்கத்தை காட்டிலும் நடிப்பில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார். சாணி காகிதம் படத்தில் கதாநாயகனாக நடித்த பிறகு நானே வருவேன் படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் பாகசூரன் படம் வெளியாக உள்ளது.

நட்டி நடராஜ் அவர்களும் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இந்தப் படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாகசூரன் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : ஒரே படத்தால் 12 வருட கடனில் தவித்த செல்வராகவன்.. 2ம் பாகம் எடுக்காததன் காரணம் இதுதான்

Trending News