ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. சிம்புவுக்கு ஒர்க் அவுட் ஆச்சு, விஜய்க்கு செட் ஆகுமா?

Vijay in Thalapathy 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தளபதி 68 படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கணும் என்பதற்காக ஒரு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் நடித்து தொடர்ச்சியாக ரிலீஸ் பண்ணி வருகிறார். அதற்கு காரணம் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அடுத்து எலக்சன் வருவதால் அப்பொழுது முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும்.

அதனால் கிடைக்கிற கேப்பில் எவ்வளவு படத்தில் நடிக்க முடியுமோ அதை நடித்து விட வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தளபதி 68 படப்பிடிப்பு சென்னையில் போய்க் கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு கூட்டணியில் விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு குழப்பத்துடனே ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

ஆனால் வெங்கட் பிரபுவை பொறுத்தவரை யாருக்கு எந்த மாதிரியான கதை கொடுக்க வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கக் கூடியவர். அந்த வகையில் தான் அஜித்துக்கு மங்காத்தா படத்தையும் சிம்புவுக்கு மாநாடு கதையும் கொடுத்து வெற்றி பார்த்தார். அதே மாதிரி விஜய்க்கு ஏற்ற ஒரு கதையை கொடுத்து மரண ஹிட் அடிப்பார் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

Also read: விஜய்க்கு வராத சங்கம் ஏன் த்ரிஷாவுக்கு மட்டும் வராங்க.? மன்சூருக்காக குரல் கொடுத்த சீமான்

ஆனால் தற்போது தளபதி 68 படத்தின் கதை இதுதான் என்று சில விஷயங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதாவது இந்த படம் சிம்பு நடித்த மாநாடு படத்தின் கதை போல டைம் ட்ராவலர் கதையாம். அப்பா மகன் கதையை மையமாக வைத்து அப்பாவை கொன்றவர்களை டைம் ட்ராவலர் மூலம் கண்டுபிடித்து அவர்களை கொள்ளும் கதை தான்.

வெங்கட் பிரபு எடுத்த மாநாடு படத்தின் கதை விஜய்க்கு பிடித்துப் போனதால், இவருடைய ட்ராக் நல்லா இருக்கு என்று விஜய் வெங்கட் பிரபுவிடம் எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அதற்காக அப்படியே டைம் ட்ராவலர் கதையை கொண்டு வந்தது எந்த அளவுக்கு சாத்தியமாக இருக்கும் என்று ரசிகர்கள் பயத்தில் இருக்கிறார்கள்.

ஏன் என்றால் சமீப காலமாக விஜய் என்னதான் மாஸ் படங்களில் நடித்து வசூல் அளவில் லாபத்தை சம்பாதித்தாலும் விமர்சன ரீதியாக கொஞ்சம் அடிபட்டு தான் வருகிறார். அந்த வகையில் இந்தப் படமும் கேலி கிண்டல் பண்ணும் அளவிற்கு கதை அமைந்து விட்டால் விஜய் ரசிகர்களால் தாங்க முடியாது.  அதனால் அவர்கள் ரொம்பவே பயத்துடன் தளபதி 68 படம் எப்படி இருக்குமோ என்று புலம்பித் தவிக்கிறார்கள். ஒருவேளை விஜய்க்கு இந்த கதை ஒர்க் அவுட் ஆச்சு என்றால் வெற்றி நிச்சயம் தான்.

Also read: விஜய்யின் காலை வாரிவிட்ட ஜோதிகா.. 3 ஹீரோக்களுக்கு மட்டும் கொடுத்த கௌரவம்

Trending News