ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பரட்டைத் தலை, தாடி, கந்தலுடை என ஆண்டி போல் இருக்கும் தனுஷ்.. குபேரா படத்தின் கதை இதுதான்

Actor Dhanush: இந்த வருடம் பொங்கல் பரிசாக தனுஷின் கேப்டன் மில்லர் வெளிவந்தது. ஆனால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அதை தொடர்ந்து அவருடைய 50ஆவது படத்தை தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ராயன் என பேரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், சரவணன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதனாலேயே இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க நேற்று தனுஷின் 51 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ வெளியானது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் முக்கிய தோற்றத்தில் நடிக்க உள்ளனர்.

Also read: கொக்கி குமாரால் கொக்கி போடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் டைரக்டர்.. ஊருக்கு போகவிடாமல் கட்டம் கட்டும் தந்திரம் 

இதுவே மீடியாக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று குபேரா என படத்தின் தலைப்பு வெளிவந்து ஆச்சரியப்படுத்தியது. அதில் தனுஷ் பரட்டை தலை, தாடி, கந்தல் உடை என ஆண்டி போல் காட்சியளித்தார். படத்தின் பெயரையும் அவருடைய தோற்றத்தையும் பார்த்ததுமே கதை எப்படி இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதாவது பணக்காரராக இருக்கும் ஒருவரின் வாழ்க்கை எந்த அளவுக்கு மாற்றம் பெறுகிறது என்பது தான் படத்தின் கதை. இன்னும் சொல்லப்போனால் செல்வத்தின் கடவுளாக நாம் வணங்கும் குபேரரின் கதையும் இதுதான்.

அதை மையப்படுத்தி தான் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் தனுஷின் தோற்றத்தை வைத்து பிச்சைக்காரன் கதை போல் படம் இருக்குமா என ஒரு யூகம் எழுந்துள்ளது. ஆனால் இதிகாச கதைகளின் மேல் தற்போது ஹீரோக்களுக்கு ஆர்வம் வந்துள்ள நிலையில் இப்படமும் சிவபெருமான் மற்றும் குபேரர் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என்பது போஸ்டரிலேயே தெரிகிறது.

Also read: அடுத்த விருதுக்கு தயாராகும் தனுஷ்.. இணையத்தை கலக்கும் குபேரன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

Trending News