திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிப்பில் சிகரம் தொட்ட சரத்பாபு.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டாரை ஒரு காலத்தில் நாம் எஜமானாக தூக்கி வைத்து கொண்டாடி இருக்கிறோம். அப்படிப்பட்ட அவரே எஜமான் என்று கூப்பிட்ட ஒரே நபர் சரத்பாபு மட்டும் தான். முத்து படத்தில் இவர்கள் இருவருக்கும் இருக்கும் காட்சிகள் இன்று வரை ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஏராளமான படங்களில் இவர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவே சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்களில் சரத்பாபுவும் ஒருவராக இருக்கிறார். அந்த வகையில் இவருடைய திரைப்பயணம் 50 ஆண்டு காலமாக வெற்றிகரமாக இருந்தது. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கேரக்டர்களிலும் மின்னி கொண்டிருந்த இந்த நட்சத்திரம் தற்போது மறைந்து போய் இருக்கிறது.

Also read: சரத்பாபு நடிப்பில் சூப்பர் ஹிட்டான 6 படங்கள்.. ரஜினியுடன் மல்லுக்கட்டிய அசோக்கை மறக்க முடியுமா!

இது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக இருக்கிறது. தற்போது இவருடைய இறப்பிற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சரத்பாபு பற்றி நாம் அறியாத பல தகவல்களும் மீடியாவை சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் பலருக்கும் ஆச்சரியம் தரும் ஒரே விஷயம் இவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவல் தான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரைப்படங்களில் வெற்றி நடிகராக வலம் வந்த இவர் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் இவரிடம் கோடிக்கணக்கில் சொத்து இருக்கும் என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் உண்மையில் சரத் பாபு இதுவரை சேர்த்து வைத்திருந்த சொத்தின் மதிப்பு 160 கோடி ரூபாய் தான்.

Also read: காட்டுத் தீயாய் பரவிய சரத்பாபு இறப்பு வதந்தி.. உண்மை என நம்பி உலக நாயகன் போட்ட ட்வீட்

இது பலருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் இப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டாலே அந்த நடிகர்கள் தங்கள் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விடுகின்றனர். அப்படி இருக்கும் போது சரத்பாபு இவ்வளவு குறைவாகத்தான் சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா என இந்த தகவலை கேள்விப்பட்ட பலரும் அதிசயித்து போகின்றனர்.

ஆனால் உண்மையில் சரத் பாபு சம்பள விஷயத்தை பொருத்தவரை யாரிடமும் கெடுபிடி காட்ட மாட்டாராம். இப்போது எல்லாம் சம்பளம் வரவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று நடிகர்கள் ஓவர் கெத்து காட்டி வருகின்றனர். ஆனால் சரத்பாபு தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொள்ளும் ஒரு நடிகராக இருந்திருக்கிறார். அதனாலேயே அவருடைய இழப்பு இன்று பலரையும் வாட்டி வதைக்கிறது. இதுவே அவர் சேர்த்து வைத்த உண்மையான சொத்து என்றால் அது மிகையாகாது.

Also read: உயிர் நண்பன் சரத்பாபு உடன் ரஜினி வெற்றி கண்ட 6 படங்கள்.. ஜமீன்தாரை வைத்து அம்பலத்தானுக்கு வைத்த ஆப்பு

Trending News