ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தை எடுத்து வருகிறார். நேற்றைய தினம் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் கதையைப் பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ஆரம்பத்திலேயே இப்படம் கிரிக்கெட் சம்பந்தமான கதையைக் கொண்டுள்ளது என்ற விஷயம் அனைவரும் அறிந்தது தான். அதனால் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற கிரிக்கெட் அனுபவம் வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து இருந்தார்.

Also Read : ரஜினி, விஜயகாந்த் போல கோட்டை விடக்கூடாது.. நின்னு நிதானமாக காய் நகர்த்தும் தளபதி, உதவும் பெரிய புள்ளி

இந்நிலையில் லால் சலாம் படத்தின் கதை என்னவென்றால் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் இருந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக ஒரு அணி மும்பைக்கு செல்கிறது. ஆனால் அங்கு இவர்கள் என்னென்ன இன்னல்கள் சந்திக்கிறார்கள் என்பதுடன் கதை நகர்கிறது.

அப்போது மும்பையில் தமிழர்கள் படும் கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற ஒரு டான் தேவைப்படுகிறார். அவர்தான் மொய்தின் பாய். இவரால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற இளைஞர்கள் இந்தியாவிற்காக விளையாடுகிறார்களா என்பதுதான் லால் சலாம் படத்தின் கதை. மேலும் இது உண்மையில் நடந்த கதையாம்.

Also Read : பல ஹீரோக்களை மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றிய ஒரே வில்லன்.. பாட்ஷா படத்துல ரஜினிக்கு இருந்த நடுக்கம்

அதாவது மும்பையில் தமிழர்களை காப்பாற்றி அவர்களுக்காக போராடிய ஹாஜ் முஸ்தபா அவரின் கதையின் தழுவலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்து வருகிறார். மேலும் படத்தின் மையக்கதை கிரிக்கெட் ஆக இருந்தாலும் டானாக இருக்கும் ரஜினியை வைத்து தான் லால் சலாம் கதை நகர்கிறது.

மேலும் ஐஸ்வர்யா லால் சலாம் போஸ்டரில் சொதப்பினாலும் படத்தில் படு பயங்கரமாக வேலை பார்த்து வருகிறார். ரஜினிக்கும் பாட்ஷா படத்திற்கு பிறகு அதேபோன்ற கதையம்சம் கொண்ட படமாக லால் சலாம் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனாலேயே தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read : ரஜினியை வைத்து பிசினஸ் செய்த தயாரிப்பாளர்கள்.. சரியான நேரத்தில் உதவிய நண்பன்

Trending News