ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் இதுதானாம்.. பொம்பள சோக்குக்கு தயாராகும் அனகோண்டா ஹீரோ

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியானது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

அதே நாளை குறி வைத்து நடிகர் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 திரைப்படமும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதனிடையே இப்படங்களின் ட்ரைலர் நேற்றைய தினம் சிறப்பாக வெளியானது. இதில் சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலர் வெளியான 22 மணி நேரத்தில் 4.4 மில்லியன் பார்வையாளர்களை மட்டும் கடந்த நிலையில், விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர் வெளியான 14 மணிநேரத்திலேயே 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Also Read: நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்

அந்த அளவுக்கு இப்படத்தின் ட்ரைலர் கேங்ஸ்டர்கள் நிறைந்த அதிரடி ஆக்ஷன் காட்சிகள், காமெடி என வெளியாகி ரசிகர்களை அதகளப்படுத்தியள்ளது. 70களின் காலக்கட்டத்தை மையமாக வைத்து எடுத்துள்ள இப்படத்தில் டைம் ட்ராவல் மூலமாக டெலிபோனில் பேசும் வகையில் வித்தியாசமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக ட்ரைலர் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் செய்யும் ஆக்ஷன் காட்சிகள், பொம்பள சொக்கு கேக்குதா என்ற வசனங்கள் உள்ளிட்டவை நம்மை சிரிக்க வைக்கின்றன.

ஆண்டனியாக வலம் வரும் விஷால், இப்படத்தில் பெண்கள் மீது அதிகம் பிரியம் கொண்டவராகவும், அவரை போலவே எஸ்.ஜே.சூர்யாவும் அவருடன் இணைந்து செய்யும் அலப்பறை தான் ட்ரைலரில் ஹைலைட்டாக காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலரில், விஷால், எஸ்.ஜே சூர்யாவை தவிர்த்து நடிகைகளான ரித்து வர்மா, அபிநயா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள நிலையில், 80களின் கவர்ச்சி நடிகை மறைந்த சிலுக்கு ஸ்மிதாவின் கதாபாத்திரமும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Also Read: மீண்டும் தயாரிப்பாளர் தலையில் சட்னி அரைக்கும் விஷால்.. யாருமே இல்லாத கடையில் டீ போட்டு என்ன பிரயோஜனம்

அந்த வகையில், இப்படத்தில் நடித்துள்ள விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரங்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது. மினி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடியாம். இதுதான் விஷாலின் கேரியரில் அவர் நடித்த அதிக பட்ஜெட் திரைப்படமாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம்.

கேங்ஸ்டராக 70 காலக்கட்டத்தில் வலம் வரும் விஷால் ஆண்டனி கதாபாத்திரத்திலும், 90களில் அவருடைய மகனாக மார்க் கதாபாத்திரம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவும் மதன் பாண்டியன் மற்றும் ஜாக்கி பாண்டியன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே நடிகர் விஷால் ஏற்கனவே அனகோண்டா ஹீரோ என ரசிகர்கள் அழைத்து வரும் நிலையில், மார்க் ஆண்டனி பட ட்ரைலரில் அவரின் கதாபாத்திரம் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Also Read: நண்டு சிண்டெல்லாம் இயக்குனராகுது, நம்ம மட்டும் இப்படியே இருக்கோமே.. ஜேசன் சஞ்சய்யை பார்த்து ஆதங்கப்படும் விஷால்

Trending News