சின்மயி சினிமா உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் ஆன பாடலாசிரியர் வைரமுத்துவினால் தனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக கூறியிருந்தார். இப்போது சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அந்த நாளில் என்ன நடந்தது என்பதை அவர் கூறினார். ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிவிட்டரில் #MeToo என்னும் ஹாஷ்டேக் பிரபலமானது.
உலகில் உள்ள நிறைய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை பற்றி மனம் திறந்து பேசினர். இதில் பல முக்கிய பிரபலங்கள் மாட்டினார்கள். அப்போது தான் சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொந்தரவுகளை பற்றி கூறினார், சின்மயி சில வருடங்களுக்கு முன்பு சுவிச்சர்லாந்துக்கு ஒரு கலைநிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்று இருக்கிறார்.
Also read: சமந்தாவின் வாழ்க்கையை பற்றி புட்டு புட்டு வைத்து சின்மயி.. விவாகரத்துக்கான காரணம் இதுதான்
அங்கே நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்ற பிறகு கலைநிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சின்மயிடம் வந்து வைரமுத்து உங்களை நேரில் சந்திக்க சொல்லியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். சின்மயி எதற்காக என்று கேட்டபோது அவரிடம் சரியான பதில் இல்லை. சின்மயி தன்னுடைய அம்மாவோடு வைரமுத்துவை பார்க்க செண்டிருக்கிறார். சின்மயின் அம்மா கீழே உட்கார்ந்து இருந்து இருக்கிறார்.
சின்மயி அவரை காண மேலே சென்று இருக்கிறார். அப்போது வைரமுத்து சின்மயியை கட்டிபிடித்ததாகவும், பலவந்த படுத்த முயற்சி செய்ததாகவும் குற்றம் சுமத்தி இருக்கிறார். சென்னை வந்த பிறகும் பலமுறை, பல விதங்களில் வைரமுத்து சின்மயியை தொந்தரவு செய்து இருக்கிறார். பிரபல அரசியல் கட்சியை வைத்தும் மிரட்டி இருக்கிறார்.
Also read: நயன்தாராவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்த சின்மயி.. பகிரை கிளப்பிய உண்மை
இது எதற்குமே சின்மயி அடிபணியவில்லையாம். #MeToo குற்றச்சாட்டிற்கு பிறகு பிரபல இயக்குனர்கள், பிரபலங்கள் வைரமுத்துவுக்கு சப்போர்ட்டாக வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்தார்கள். சின்மயிக்கு எதிராக மீடியாக்களில் பேசவும் செய்தார்கள். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று சின்மயிக்கு போன் செய்து எல்லாம் பேசியிருக்கிறார்கள். கொலைமிரட்டல் விட்டு இருக்கிறார்கள்.
Also read: உனக்கு மானத்தை விட, பட வாய்ப்பு பெருசா.! சின்மயி குறித்த ஆடியோ வெளியிட்ட பிரபலம்
இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக பேசிய சின்மயி தன்னுடைய குற்றச்சாட்டிற்கான எல்லா ஆதாரங்களும் சேர்த்து வைத்திருப்பதாகவும் அதை ஒரு 5,6 பேரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் ஒரு வேளை தனக்கு ஏதாவது ஆகிவிட்டாலும், ஆதாரங்கள் வெளிவரும் என்றும் கூறியிருக்கின்றார்.