திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்

Maamannan Review For kamal: கமல் எப்போதுமே தொலைநோக்கு சிந்தனை உடையவர். பொதுவாக அறிவுரை சொல்லும் போதும் எதிரே உள்ளவர்கள் புண்படக் கூடாது என்பதால் நாசுக்காக சொல்லக்கூடியவர். இந்நிலையில் சமீபத்தில் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்த விஷயம் கமலின் தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்தது தான்.

மாமன்னன் விழாவில் சினிமாவின் ஆளுமையான கமல் முன்னிலையில் இருக்கும் போது மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இசக்கி கதாபாத்திரத்தை வைத்து தான் மாமன்னன் படத்தை எடுத்துள்ளேன். அந்தப் படத்தில் சாதி பெருமை பேசியதால் இசக்கி போன்றவர்கள் தற்போதும் முன்னேற முடியாமல் இருப்பதாக சாடி இருந்தார்.

Also Read : மொத்த யூனிட்டையும் குழப்பிய லோகேஷ் கனகராஜ். . பாபநாசம் கமல் போல் செய்த ட்ரிக்ஸ்

ஆனால் மேடையில் பேசிய கமலோ இப்போதும் தேவர் மகன் படம் எல்லோருக்கும் பிடித்திருக்க காரணம் கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு பக்கபலமாக இசக்கி ஆக இருந்த வடிவேலுவினால் தான் என பெருமையாக பேசி இருந்தார். இந்நிலையில் இந்த விழாவுக்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்வு பேசு பொருளாக மாறியது.

பெரும்பாலானோர் கமலுக்கு ஆதரவாக பேசி வந்தனர். மேலும் மாரி செல்வராஜின் முந்தைய படங்களை பாராட்டிய பலரும் கூட இந்நிகழ்வுக்குப் பிறகு அவரை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் ஆண்டவர் இதை தனது பெருந்தன்மை காரணமாக தவறாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது வரை பக்கபலமாக இருந்து வருகிறார்.

Also Read : எம் எஸ் பாஸ்கரை பைத்தியக்காரன் என திட்டிய கமல்.. படத்திற்கு பிளஸ் ஆக மாறிய சம்பவம்

இந்நிலையில் கமலிடம் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் தனியாக திரையிட்டு காட்டியுள்ளார். படம் முழுவதும் பார்க்கும் வரை கமல் என்ன சொல்வாரோ என்ற பதட்டத்திலேயே மாரி செல்வராஜ் இருந்துள்ளார். மேலும் கடைசியாக ஆண்டவர் மாமன்னன் படத்தை புகழ்ந்து தள்ளி விட்டாராம்.

மேலும் மாரி செல்வராஜின் கையைப் பிடித்துக் கொண்டு படம் அருமையாக இருப்பதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டவுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னை மீறி மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து உள்ளார். பொது மேடையில் அநாகரீகமாக மாரி செல்வராஜ் நடந்து கொண்டாலும் கமல் தன் நிலையில் இருந்து மாறாமல் இருக்கிறார். அதனால்தான் அவர் ஆண்டவர்.

Also Read : கமலை வைத்துக்கொண்டே தேவர் மகன் சாதிய படம் என கூறிய மாரி செல்வராஜ்.. வெடிக்கும் சர்ச்சை

Trending News