வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோ படத்தைப் பற்றி பேசிய மன்சூர் அலிகான்.. வருத்தப்பட்டாலும் செய்து காட்டிய லோகேஷ்

Lokesh-Leo-Mansoor Ali Khan: விஜய்யின் லியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் மன்சூர் அலிகான் தான். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை இவரை மனதில் வைத்து லோகேஷ் எடுத்திருக்கிறார்.

ஆனால் லோகேஷ் மற்றும் மன்சூர் அலிகான் லியோ படத்திற்கு முன்பு வரை பார்த்துக் கொண்டதே கிடையாது. ஆனாலும் தனது படத்தில் மன்சூர் அலிகானை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை லோகேஷ்க்கு இருந்துள்ளது. இப்போது விஜய் லியோ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது.

இந்த சூழலில் இன்று லியோ படத்தை பார்த்துவிட்டு மன்சூர் அலிகான் பேட்டி கொடுத்திருக்கிறார். அவருக்கே உண்டான பாணியில் இரண்டு ஃபுல் அடிச்ச போதை போல் இருக்கிறதாம். மேலும் மூன்று மணி நேரம் குறையாமல் கொண்டு போய் இருக்கிறார் லோகேஷ் என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இப்போது லியோ படத்திற்கு அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் 9:00 மணி காட்சியில் இருந்து தான் தொடங்கப்படுகிறது. ஆகையால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் லியோ படத்தை பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆகையால் அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கேட்டிருக்கிறார்.

மேலும் லியோ படத்தில் அதிக காட்சிகளில் மன்சூர் அலிக்கான் நடிக்கவில்லை. தன்னுடைய ஒரு படத்திலாவது அவரை நடிக்க வைப்பேன் என்று லோகேஷ் சொன்னதை லியோ படத்தில் செய்து காட்டியிருக்கிறார். மென்மேலும் இந்த படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் அவர்கள் யாரையும் சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் ஒரு மாதமாகவே லியோ படத்தைப் பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. லியோ வசூல் வெளியான பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

Trending News