திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொட்டிப் பாம்பாக மாறிய சூர்யா.. முழுசாக தன் பக்கம் இழுத்த ஜோதிகா

Actor Surya: சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. பல போராட்டங்களுக்குப் பிறகு குடும்பத்தின் சம்மதத்துடன் தான் சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கல்யாணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார் ஜோதிகா.

ஆனால் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்தெறிந்து குழந்தைகள் வளர்ந்த உடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜோதிகா தனது குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆனார்.

Also Read : சூர்யா- ஜோதிகா காதலுக்கு உதவிய அஜித்தின் நண்பர்.. பல வருடத்திற்கு பின் லீக்கான சீக்ரெட்

சூர்யா இதற்காக அங்கு ஒரு பிரம்மாண்ட வீடு வாங்கி இருந்தார். இதைப் பற்றி விசாரிக்கும் போது ஜோதிகாவின் பெற்றோர் உடல்நிலை பிரச்சனை இருப்பதால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக அங்கு சென்றார் என கூறப்பட்டது. மேலும் குழந்தைகளின் படிப்புக்காகவும் அங்கு சென்றுள்ளார்கள் என கூறப்பட்டது.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சூர்யாவை தன் பக்கம் ஜோதிகா இழுத்து வந்தார் என கூறப்பட்டது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜோதிகா பாலிவுட்டில் இறங்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. ஆகையால் இனி ஹிந்தி படங்களில் தான் அவர் ஆர்வம் செலுத்துவார் என பேசப்பட்டு வந்தது.

Also Read : கதாபாத்திரத்திற்காக மொட்டை அடித்த 6 நடிகர்கள்.. ஹீரோ இமேஜை டேமேஜ் செய்த சூர்யா

இப்போது சூர்யாவும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணைந்த வாடிவாசல் படத்தில் பணியாற்ற இருக்கிறார்.

மேலும் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த வருகிறார்கள். இந்த படத்தை சூர்யா தயாரித்து வரும் நிலையில் இதில் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இப்போது பாலிவுட் படம் ஒன்றில் முழுக்க முழுக்க கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஜோதிகாவின் அறிவுறுத்தல் படி தான் சூர்யா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read : ஒரே படத்தில் 5 நடிகைகளுடன் ஜோடி போட்டும் கிசுகிசுவில் சிக்காத ஹீரோ.. கெட்ட நேரத்தால் வாழ்க்கையை தொலைத்த சூர்யா பட வில்லன்

Trending News