3-ஆவது திருமணத்துக்கு அப்பாகிட்ட போன் பண்ணிதான் சொன்னேன்.. அத கேட்டு அப்பா

illayaraja-yuvan-shankar-raja
illayaraja-yuvan-shankar-raja

தன்னுடைய 16 வயதில் ‘அரவிந்தன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இதைத் தொடர்ந்து வேலை, கல்யாண கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக, என அடுத்தடுத்து பல படங்களில் இசையமைத்தார். குறிப்பா இவர் இசையில் 2000-ஆம் ஆண்டு, அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ திரைப்படத்தில் இவருடைய இசையில் வெளியான பாடல்கள் மட்டுமின்றி, BGM மியூசிக்கும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அன்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் சின்ராசை கையிலே பிடிக்க முடியாது. பயங்கர பிஸியாக இருக்கும் இசைமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன், கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றிய படங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் யுவன் இசைமைத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்.

தன்னுடைய இசைக்காக பல விருதுகளை வென்றுள்ள யுவன், பியார் பிரேமா காதல், மாமனிதன், பொன் ஒன்று கண்டேன், உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் உள்ளார். என்னதான் திரையுலக வாழ்க்கை இவருக்கு ஒரு வெற்றியை கொடுத்தாலும், இவருடைய பர்சனல் வாழ்க்கை சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதது என கூறலாம்.

என்னால் வரமுடியாது என்று கூடிய இளையராஜா

இவர் சுஜையா சந்திரன் என்கிற பெண்ணை காதலித்து, 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், மூன்றே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மூன்றில் வருடத்தில் யுவன் சங்கர் ராஜாவை விவாகரத்து பெற வைத்தது.

இதை தொடர்ந்து, முஸ்லிம் மதத்திற்கு யுவன் சங்கர் ராஜா மாறினார். இது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. மதம் மாறிய ஒரே வருடத்தில், அதாவது 2015 ஆம் ஆண்டு யுவன் சப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்த திருமணத்துக்கு இளையராஜா செல்லவும் இல்லை. இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ஏன் உங்கள் மூன்றாவது திருமணத்துக்கு அப்பா இளையராஜா வரவில்லை என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்க்கு பதிலளித்த யுவன், “என் கல்யாணம் திடீர் என்று தான் நடந்தது, ஊருக்கு போய் இருந்தேன், அடுத்த நாளே கல்யாணம் என்று இருந்தது. “

“அப்பாகிட்ட போன் செய்து சொன்னேன், அதற்கு அவர் நான் வருவேன், அது பிரச்சனை இல்லை. ஆனால் நான் வந்தா எனக்காக என்ன பண்றதுன்னு சங்கடப்படுவாங்க, அதனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டார். திருமணம் முடிந்த பிறகு தான் அவரை சந்தித்தோம்.” என்று கூறியுள்ளார்.

இது நெட்டிசன்கள் கவனத்தை பெற்று வருகிறது. மேலும் பலர் இது உருட்டு, உண்மையில் அவருக்கு வர விருப்பமிருந்திருக்காது என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner