திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ரஜினி இமயமலை போறது இதுக்கு தான்.. அதிர்ச்சியை கிளப்பிய பிரபலத்தின் பேச்சு

பல வருடங்களாக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் இருக்கும் ரஜினி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். அந்த வகையில் இவர் ஸ்ரீ ராகவேந்திரா, பாபா உள்ளிட்ட ஆன்மீக திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தியானம், ஆன்மீக வழிபாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் அடிக்கடி இமயமலைக்கு சென்று சித்தர்களை சந்திப்பது, மன அமைதிக்காக தவம் செய்வது என்று தன் ஆன்மீக பயணத்தை தொடர்ந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இவர் இமயமலைக்கு செல்லவில்லை. எப்போதும் இமயமலைக்கு சென்றால் புது தெம்புடன் சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறும் ரஜினி தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.

Also read: ரஜினி, கமல் தயக்கமின்றி எல்லாத்தையும் பேசக்கூடிய ஒரே மனிதர்.. சகலகலா வல்லவனாக இருந்த பிரபலம்

இந்நிலையில் டாக்டர் காந்தராஜ் இமயமலையை தேடி எதற்காக பலரும் ஆர்வத்துடன் செல்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதாவது அவர் போதை பொருள் சம்பந்தமான செடிகள் தமிழகத்தில் தான் அதிகமாக வளர்கிறது என்று தெரிவித்துள்ளார். அதில் நாமக்கல் மாவட்டத்தில் தான் அதன் விளைச்சல் அதிகமாக இருக்குமாம்.

அதேபோன்று பர்மா, நேபாளம் பகுதிகளிலும் இந்த செடிகள் அமோக விளைச்சலை கொடுக்கிறது. அதனால் தான் சில நடிகர்கள் இமயமலைக்கு சென்று தவம் செய்கிறேன் என கிளம்பி விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அங்கு இந்த போதை வஸ்துகளை உபயோகப்படுத்தினால் தான் தவம் செய்ய முடியும் என்றும் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Also read: ரஜினியை முழுவதுமாக காப்பியடிக்கும் விஜய்.. எப்படியாச்சும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் நமக்கு வரணும் ஆசை.!

இதன் மூலம் அவர் மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை பற்றி கூறியிருக்கிறார். ஏனென்றால் இங்கிருக்கும் நடிகர்களில் அவர் ஒருவர் மட்டுமே அடிக்கடி இமயமலை சென்று தவம் செய்கிறேன் என கூறுவார். ஆனால் அதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்று கந்தராஜ் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவருடைய இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இளமை காலத்தில் ரஜினி மது, போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும் இப்போது உடல் நிலையை கருத்தில் கொண்டு அதை எல்லாம் தவிர்த்து விட்டார். இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Also read: சண்டை இல்லை பஞ்ச் டயலாக் இல்லை.. ரஜினி மாஸ் காட்டாமல் நடித்த 5 படங்கள்

Trending News