திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மெர்சலை மிஞ்சிய காப்பியா இருக்குதே.. விஜய் ஆண்டனி படத்திற்கு வந்த பெரிய சோதனை 

2017 ஆம் ஆண்டு விஜய், காஜல் அகர்வால் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் மெர்சல். அட்லி இயக்கத்தில் வெளியான இந்த படம் 80களில் கமல் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படத்தின் அட்டகாப்பி. ஆனால் இப்போது மெர்சலையே மிஞ்சும் அளவுக்கு விஜய் ஆண்டனியின் படம் இருப்பதாக வெளியான செய்தி  இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் விஜய் ஆண்டனி நடிப்பில் பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன்று, அப்படியே கமல் நடித்த அந்த படத்தின் அடுத்த வெர்ஷன் என்கிறார்கள். ஏற்கனவே மெர்சல் படம் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்ற ஒரு பேச்சு அடிபட்டது.

Also Read: பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்.. விபத்தில் இருந்து தப்பித்த விஜய் ஆண்டனிக்கு வந்திருக்கும் புது பிரச்சனை

இப்பொழுது விஜய் ஆண்டனி நடித்து ரிலீசாக காத்துக் கொண்டிருக்கும் படம் அக்னி சிறகுகள். இந்த படம் அப்படியே கமலின் மூன்றாம் பிறை படத்தின் தழுவலாக இருக்கிறதாம். இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்சரா ஹாசன் நடித்துள்ளார். இதை பார்த்த கமல் படத்தில் நிறைய விஷயங்களை மாற்றும் படி இயக்குனரிடம்  கூறியிருக்கிறார்.

ஆக்சன் திரில்லர் ஜானரில்  உருவாகியுள்ள இந்த படத்தை நவீன் இயக்கியுள்ளார்.  அம்மா  கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிப்பாளர் டி சிவா படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி, அக்சரா ஹாசன் உடன்  அருண் விஜய், பிரகாஷ்ராஜ், நாசர், சதீஷ்குமார்  சென்ராயன்உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Also Read: விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலைமை.. மலேசியாவில் இருந்து வெளியிட்ட வைரல் ட்விட்டர் பதிவு

படத்திற்கு  நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில்  அக்னி சிறகுகள் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, அந்த படம் அப்படியே கமல் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறையின் அடுத்த வெர்ஷன் என்பது தெரிந்ததும் தூக்கி வாரி போட்டு இருக்கிறது.  

அதுமட்டுமல்ல விஜய் ஆண்டனியும் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் திணறுகிறார். ஏற்கனவே பிச்சைக்காரன் 2 படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும், விஜய் ஆண்டனிக்கு அக்னி சிறகுகள் படத்திற்கும் இப்படி ஒரு சோதனை ஏற்பட்டிருப்பதால், அவருக்கு இப்போது நேரம் சரியில்லாதது போல் தெரிகிறது.

Also Read: அடிமேல் அடி வாங்கும் விஜய் ஆண்டனி.. படத்தை திரையரங்கில் வெளிவரத்துக்கு கூட வாய்ப்பில்லையாம்

Trending News