வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பட்ஜெட் 450 கோடி ஆனா 1000 கோடிக்கு விலை பேசப்பட்ட படம்.. லியோவுக்கே சாவு பயத்தை காட்டிடுவாங்க போல!

Leo: மிகப்பெரும் வசூல் சாதனையை பெற்று மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் ஜெயிலர் ஃபீவர் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. இதை அடுத்து லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளிவர இருக்கும் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு தான் உச்சகட்டத்தில் இருக்கிறது.

பாராபட்சம் இல்லாமல் அனைத்து மொழி நடிகர்களையும் வளைத்து போட்டு படம் எடுத்திருக்கும் லோகேஷ் லியோவை சர்வதேச அளவில் வெற்றி பெற வைக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பே ஒரு படம் 1000 கோடிக்கு விலை பேசப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: விஜய் பற்றி பெருமையாக பேசிய அட்லி, கட் செய்ததா சன் டிவி.? நம்பியாராக மாறி வில்லத்தனம் செய்த கமலின் கூட்டாளி

அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்திற்கு தான் இவ்வளவு பெரிய பிசினஸ் நடந்து வருகிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்து ஹீரோவுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. இந்த சூழலில் இப்படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் மிகப்பெரிய நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதாவது பாலிவுட்டில் மிகப்பெரும் நிறுவனமாக இருக்கக்கூடிய கோல்ட் மைண்ட் டெலிஃபிலிம்ஸ் தான் புஷ்பா 2 படத்தின் ஆடியோ உரிமையை 46 கோடிக்கு வாங்கி இருந்தது. அதையடுத்து தற்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மனீஷ் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் கேட்டிருக்கிறாராம். மேலும் லாபமோ நஷ்டமோ அனைத்துமே எங்கள் பொறுப்பு தான்.

Also read: நன்றி மறந்த தளபதி.. விஜய்க்காக போராடி காப்பாற்றி விட்ட நடிகருக்கு செய்த துரோகம்

அதனால் பணத்தை வாங்கி கொண்டு நீங்கள் செல்லுங்கள், மத்த எல்லாத்தையும் நாங்களே பாத்துக்குறோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்களாம். இருப்பினும் தயக்கம் காட்டி வரும் தயாரிப்பாளரை கரைய வைத்து படத்தை வாங்கி விட தீவிர முயற்சிகளும் நடைபெற்று வருகிறதாம்.

இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் இது உறுதி செய்யப்பட்டு விடும். அப்படி பார்த்தால் லியோவுக்கு புஷ்பா 2 சரியான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் வியாபாரமே ஆயிரம் கோடி என்றால் வசூல் எந்த அளவுக்கு இருக்கும் என்ற பேச்சு தான் இப்போது எழுந்துள்ளது. லியோவுக்கே சாவு பயத்தை காட்டிடுவாங்க போல.

Also read: லோகேஷ் கூப்பிட்டும் கதாபாத்திரம் பிடிக்கலைன்னு நோ சொன்ன நடிகர்..விசாரித்துப் பார்த்தால் கமலுடன் டிஷ்யூம்

Trending News