வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூரியை காமெடியன்னு அசால்டா நினைச்சுடாதீங்க! சிவகார்த்திகேயன் சொன்ன செய்தி

Soori: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த விடுதலை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அதிலும் இதுவரை காமெடியனாக இருந்த சூரி இதில் நடிப்பில் கலக்கி இருந்தார்.

அதை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டானார். அதில் கருடன் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது.

அதன் டிரெய்லர் வெளியீடு விழா இன்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன் சூரியை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி இருந்தார்.

சிவகார்த்திகேயனின் பேச்சு

அதில் விடுதலை படத்தில் வெற்றிமாறன் அவரை ஒரு நல்ல நடிகராக மாற்றி இருந்தார். அதற்கு குறை வைக்காத அளவுக்கு கொட்டுக்காளி ஒரு படி மேலே இருக்கும் என தெரிவித்திருந்தார்.

மேலும் சீரியஸ் கேரக்டரில் நடிப்பவர்களுக்கு காமெடியாக நடிப்பது கஷ்டமாக இருக்கும். ஆனால் ஒரு காமெடியனுக்கு சீரியஸ் கேரக்டர் சுலபமாக வந்துவிடும்.

அதனால் சூரி அண்ணனை லேசாக நினைத்து விட வேண்டாம் என சர்டிபிகேட் கொடுத்துள்ளார். இப்படியாக கருடன் விழா மேடையை சிவகார்த்திகேயன் சுவாரஸ்யமாக மாற்றியிருந்தார்.

மேலும் நடிகை வடிவுக்கரசி சிவகார்த்திகேயன் தனக்கு அவர் படத்தில் வாய்ப்பு தர வேண்டும் என விளையாட்டாக கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயனும் நிச்சயமாக பண்ணலாம் என வாக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அசுர வளர்ச்சியில் கருடன் சூரி

Trending News