செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் எல்லாம் ஓரமா போங்க.. பேய் பட சீசனை தொடங்கி வைக்க போகும் படம்

Sundar C- Raghava Lawrence: ஒரு காலத்தில் பேய் படங்களாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தது. மாதத்தில் 5 படங்களாவது திகில் கலந்த மிரட்டல் படமாக தான் வெளியாகும். இந்த ட்ரெண்டை உருவாக்கிய பெருமை ராகவா லாரன்ஸ், சுந்தர் சி-யையே சேரும்.

ஏனென்றால் அவர்கள் தான் அடுத்தடுத்த பாகங்களாக பேய் படங்களை எடுத்து தள்ளினார்கள். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் மூலம் பலரையும் மிரட்டினார். அதேபோல் சுந்தர் சியும் அரண்மனை சீரிஸ்களால் அதிக கவனம் பெற்றார்.

Also read: டிராக்கை மாற்றியதால் சுந்தர் சிக்கு ஃப்ளாப்பான 5 படங்கள்.. வடிவேலு இல்லாததால் மொக்கை வாங்கிய மூவிஸ்

இந்த படங்களின் வெற்றியை பார்த்து முன்னணி நடிகர்கள் கூட இது போன்ற படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தனர். அப்படி தமிழ் சினிமாவில் வந்த படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். இதற்கு ரசிகர்களும் பெருமளவில் ஆதரவு கொடுத்தனர். சமீப காலமாகத்தான் பேய் படங்களின் வருகை ஓரளவு குறைந்திருந்தது.

ஆனால் அதை மீண்டும் தொடங்கி வைப்பது போன்று ஒரு அட்டகாசமான படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஈரம் படத்தின் மூலம் வித்தியாசமான திகில் அனுபவத்தை கொடுத்த இயக்குனர் அறிவழகன் அடுத்ததாக சப்தம் படத்தின் மூலம் களமிறங்க இருக்கிறார்.

Also read: பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்.. டாப் ஹீரோக்களால் பழைய கதையை உருட்டும் சுந்தர் சி

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களின் சப்த நாடியையும் ஒடுக்கும் அளவு திகிலாக இருக்குமாம். ஈரம் படத்தில் தண்ணீர் மூலம் பயத்தை காட்டிய இவர் இதில் சத்தம் மூலம் மிரள விட இருக்கிறார். இப்படம் வெளிவந்த பிறகு பேய் சீசன் ஆரம்பித்து விடும் என்று பட குழுவினர் அடித்துக் கூறுகிறார்கள்.

அந்த அளவுக்கு இப்படம் ரசிகர்களை கதையோடு பயணிக்க வைக்கும் வகையில் தயாராகி வருகிறது. அப்படி பார்த்தால் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் அனைவரும் இந்த படத்தால் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில் சப்தம் படம் உறுதியாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து மிரள வைக்கப் போகிறது.

Also read: மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

Trending News