விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பி நான்கு பேரும் கஷ்டப்பட்டு கட்டிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்தனர். இதற்கு சரியான ஆவணம் இல்லை என அதிகாரிகள் காரணம் சொன்னாலும் அது உண்மையல்ல. இதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பலமுறை மாநகராட்சி அலுவலகத்திற்கு ஏறி இறங்கினால் அவர்களுக்கு அவமானம் மட்டுமே மிஞ்சம்.
இந்நிலையில் கலக்கத்துடன் இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கண்ணனை வழிமறித்து நிறுத்திய ரவுடி ஒருவர்,டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அவ்வளவுதானா என்று நக்கல் அடிக்கிறார். இந்த ரவுடி ஏற்கனவே கண்ணனை அடித்து உதைத்த கும்பலை சேர்ந்தவர். கண்ணன் காதல் திருமணம் செய்துகொண்டு மீனாவின் அப்பா கடையில் வேலை பார்த்தபோது, அங்கு ஒரு பையன் 5 ஆயிரம் ரூபாயை திருடி அதை கண்ணன் மீது பழி போட்டுவிட்டார். பின்பு இந்த விஷயம் தெரிந்ததும் அந்த பையனை மீனாவின் அப்பா அடித்து கடையிலிருந்து விரட்டிவிட்டார்.
பிறகு கண்ணன் மீது பழி போட்டதால் அந்த பையனை கதிர் நடுரோட்டில் அறைந்து விடுகிறார். பின்பு அந்தப் பையன் ரவுடி கும்பலிடம் நெருக்கமாக பழகுவதால் அந்த கும்பலை வைத்து கண்ணனை அடித்து துவைத்து விடுகிறார். பிறகு கண்ணனை அடித்த கோபத்தில் கதிர் அந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்களை அடித்துவிடுகிறார்.
இப்படி ஏற்கனவே நடந்து முடிந்த பிரச்சனைகளுக்கு பழிவாங்கும் விதத்தில் ரவுடி கும்பலின் தலைவன் தான் மாநகராட்சி அலுவலகத்தில் ஈ.ஓ-ஆக இருக்கும் அப்பாவிடம் சொல்லி தற்போது பாண்டியன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரை இழுத்து மூடி சீல் வைக்க சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளார்.
அத்துடன நாளை அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருந்த இடம் இல்லாமல் தரைமட்டமாக இடிக்கப் போவதாகவும் ரவுடி கும்பலின் தலைவன் கண்ணனிடம் சொல்ல, கண்ணன் அந்த ரவுடிகளிடம் எதுவும் பேசாமல் அண்ணன்கள் இடம் எதற்காக கடைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தை சொல்வதற்காக வீட்டிற்கு விரைகிறார்.
இவ்வளவு நாள் காரணம் தெரியாமல் குழம்பித் தவித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு காரணம் தெரிந்ததும் அதனை மேல் அதிகாரிகளிடம் முறையிட்டு பிரச்சினையை சரிசெய்து விரைவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் திறப்பு விழாவை கோலாகலமாக கொண்டாட போகின்றனர்.