புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மீண்டும் ரசிகர்கள் மண்டைய உருட்ட போகும் ரஜினி.. இந்த முறை டார்கெட்டே வேற

Super Star Rajini: அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற சர்ச்சை கிளம்பிய சமயத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது காக்கா- கழுகு கதை சொல்லி, எல்லாருக்கும் சரியான பதில் கொடுத்தார். இப்போது மறுபடியும் ரஜினி காக்கா- கழுகு கதை சொல்ல போகிறார், ஆனால் இந்த முறை டார்கெட்டே வேற.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய கணவர் தனுஷிடம் விவாகரத்து பெற்றுவிட்டு இப்போது படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார். அவர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரையும் வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த லால் சலாம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார். லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என உறுதி செய்யப்பட்டது. இந்த முறை ரஜினி போட்டியில் இல்லை. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-க்கும் தனுசுக்கும் தான் போட்டி. இவர்கள் இருவரும் சினிமாவில் போட்டி போட்டுக் கொண்டு ஷைன் ஆகி கொண்டிருக்கின்றனர். தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வரும் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Also Read: தமிழ் புத்தாண்டுக்கு வசூல் வேட்டையாட வரும் 5 படங்கள்.. அஜித், விஜய்க்கு பயத்தை காட்டும் படம்

மீண்டும் காக்கா- கழுகு கதை சொல்ல போகும் ரஜினி

இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடக்கப்போகிறது. ஆனால் ரஜினிகாந்த் இதில் கலந்து கொள்வாரா என்று தெரியவில்லை. அப்படி கலந்து கொண்டால் விஜய்க்கு காக்கா- கழுகு கதை சொன்னார், இப்ப தனுஷுக்கு ஒரு கதை ரெடி பண்ணி வைத்து விடுவார்.

சொந்த மருமகனுக்கே ஆடியோ லான்ச்சில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆப்பு அடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரசிகர்களும் அந்த கதையை கேட்டுட்டு மண்டைய உருட்டிக்கிட்டு, சோசியல் மீடியாவையும் பரபரப்பாகிவிடுவார்கள். மேலும் ரஜினியின் ‘தலைவர் 170’ படமும், தனுஷின் ‘D50’ படமும் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகி நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகின்றது.

Also Read: அடுத்த வருடம் ரிலீஸ் ஆக உள்ள மாஸ் ஹீரோக்களின் 13 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் மோதும் தனுஷ்

Trending News