Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் TTF டாஸ்க் நடந்து முடிந்துள்ளது. அதில் ரயான் அதிக பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் பிக்பாஸ் அதை போட்டியாளர்களுக்கு அறிவிக்காமல் இன்று விஜய் சேதுபதி மூலம் அறிவிக்க உள்ளார். இதனால் அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பும் பதட்டமும் கலந்து இருக்கின்றனர்.
அதேபோல் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே ஓட்டு நிலவரம் படி மஞ்சரி கடைசி இடத்தில் இருக்கிறார்.
அதனால் அவர் வெளியேறுவது உறுதியாக தெரிகிறது. ஆனால் இரண்டு எலிமினேஷன் என்பதால் மற்றொருவர் யார் என்பது தான் ட்விஸ்ட்.
ஜோடியோடு வெளியேறும் வயித்தெரிச்சல் பீஸ்
அதன்படி பவித்ரா, ஜாக்குலின் இருவரும் பட்டியலின் கடைசி இடங்களை பிடித்துள்ளார்கள். ஆனால் ஜாக்லினை விட பவித்ராவுக்கு கணிசமான ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறது.
அதனால் இந்த வாரம் ஜாக்லின் வெளியேறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இவரும் மஞ்சரியும் இணைந்து இந்த வாரம் முழுவதும் தங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டே இருந்தனர்.
அதனாலேயே இவர்கள் குறித்த நெகட்டிவ் கமெண்ட்டுகளும் பரவியது. தற்போது இவர்கள் ஒன்றாக வெளியேறுவதில் பார்வையாளர்களுக்கு சந்தோசம் தான்.