புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் காந்த கண்ணழகி.. செம ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரம் ஒரு நபர் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் ஐந்து வாரத்தை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல மாடல் அழகியான சுருதி இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளார்.

இவர் தாமரையிடம் இருந்த நாணயத்தை அவர் உடை மாற்றும் போது எடுத்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பிறகு கமல் சுருதியை பிக்பாஸ் விதிமுறைகளுடன் நெறிகளையும் பின்பற்றி விளையாடுங்கள் என்று சாடினார்.

அத்துடன் ரசிகர்களும் சுருதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆடும் விளையாட்டை பார்த்து முகம் சுளித்து ஆரம்பித்துவிட்டனர். ஆகையால் கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த சுருதிக்கு ரசிகர்கள் குறைந்த வாக்குகளைப் பதிவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இருப்பினும் அவரிடம் பஞ்சபூத நாணயம் இருப்பதால் அதை வைத்து எலிமினேஷன் இல் இருந்து தப்பிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த சலுகையை பிக்பாஸ் தருவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறி.

bb5-eviction-cinemapettai
bb5-eviction-cinemapettai

ஏனென்றால் இதேபோன்று அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டபோது பாவனி ரெட்டி தன்னிடமிருக்கும் நாணயத்தை பயன்படுத்தி அபிஷேக் ராஜாவை வீட்டிலிருந்து தங்க வைக்க முடிவெடுத்தபோது, பிக்பாஸ் அந்த சலுகை வழங்காமல் அபிஷேக் ராஜாவை எலிமினேட் செய்தார்.

அதேபோன்று சுருதியும் தன்னுடைய காயினை வைத்து சலுகையை பெறுவாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவாரா என்று இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும். எனவே அதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News