திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரியங்காவுக்கு ஸ்கெட்ச் போட்ட போட்டியாளர்.. அவரையே பின்னுக்கு தள்ளிய ஷாக்கிங் ஓட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியின் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது இன்னும் ஒரு சில தினத்தில் நிறைவடைய உள்ளதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றர். 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5  நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.

எனவே இந்த ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக இருக்க முடியும். ஆகையால் இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அமீர், பாவனி, பிரியங்கா, ராஜு, நிரூப் இவர்களுள் யாருக்கு மக்கள் அதிக ஓட்டுக்களை அளிக்கிறார்களோ அவர்கள் இந்த சீசனின் வின்னர் ஆக முடியும்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளில் இருந்தே ராஜு, பிரியங்கா இருவருள் ஒருவர் தான் இந்த சீசனின் வின்னர் என்று ரசிகர்கள் கணித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் திடீரென்று நிரூப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா ஸ்டேட்டஜி உடன் விளையாடி இந்த விளையாட்டை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் கடந்த வாரம் பிரியங்கா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு ரசிகர்களின் ஓட்டுக்களை தன் பக்கம் திருப்பி உள்ளார். ஆகையால் தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கும் ஓட்டிங் லிஸ்டில் பிரியங்கா பின்னுக்கு தள்ளப்பட்டு நிரூப் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் முதலிடம் ராஜுவுக்கு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் இடம்  நிரூபிற்கும், மூன்றாம் இடம் பிரியங்காவிற்கும் கிடைத்துள்ளது. பாவனி மற்றும் அமீர் கடைசி இரண்டு இடத்தை பிடித்துள்ளனர். இவ்வாறு இந்த சீசனில் கணிக்க முடியாத அளவிற்கு ஓட்டும் லிஸ்டில் அதிரடி மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பதால் யார் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க போகின்றனர் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

அத்துடன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தும் வகையில் நிரூப் மற்றும் பாவனி இருவரில் ஒருவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

Trending News