Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி 11 வாரம் வரை வந்துவிட்டது. ஆனாலும் இந்த சீசனில் ஏதோ ஒரு விஷயம் குறையாக இருக்கிறது என்பதை ஆடியன்ஸ் இப்போது வரை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் இனிவரும் நாட்களில் டாஸ்க் கடுமையாக இருக்கும். அதன் மூலம் ஒரு விறுவிறுப்பு இருக்கும் என்று தெரிகிறது. அதன்படி கடந்த வாரம் டம்மி பாவாவாக இருந்த ரஞ்சித் வெளியேறி விட்டார்.
அதைத்தொடர்ந்து இந்த வாரம் 7 பேர் நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். அவர்களில் யாருக்கு அதிக ஓட்டு கிடைத்திருக்கிறது.
பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கிய 7 போட்டியாளர்கள்
யார் குறைந்த ஓட்டுகளோடு வெளியேறப் போகிறார் என்பதை பற்றி காண்போம். இதில் ஜாக்லின் 21.13% வாக்குகளை பெற்றுள்ளார்.
அடுத்ததாக மஞ்சரி 19.15% ராணவ் 15.53% ஓட்டுகளை பெற்றுள்ளனர். அடுத்து பவித்ரா 13.3% விஷால் 12.98% வாக்குகளை பெற்றுள்ளனர்.
இதில் கடைசி இரண்டு இடங்களை அன்சிதா, ஜெஃப்ரி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருக்கிறது.
அதில் ஜெஃப்ரி தற்போது நிலவரப்படி ஓட்டு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருக்கிறார். ஆனால் இது மாறவும் வாய்ப்பு இருக்கிறது. அதன்படி அன்சிதா வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.