செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இதெல்லாம் ஒரு டாஸ்க்கா பிக்பாஸ்.. ஜாக்லின் மீது வன்மத்தை கக்கும் போட்டியாளர்கள்

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போகப் போக ரொம்பவும் போராக இருக்கிறது. கொடுக்கப்படும் டாஸ்கிலும் வித்தியாசம் இல்லை. அதை போட்டியாளர்கள் கொண்டு செல்லும் விதமும் மொக்கையாக இருக்கிறது.

இதனாலேயே பார்வையாளர்கள் இப்போது நிகழ்ச்சியை பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஸ்கூலாக மாறி இருக்கிறது.

பிரின்சிபல், டீச்சர் என மேனேஜ்மென்ட் ஒரு பக்கம் மாணவர்கள் குழு ஒரு பக்கம் என பிரிந்துள்ளனர். அதில் ஜாக்லின் மாரல் கிளாஸ் எடுக்கிறார். ஆனால் அவரை மாணவர்கள் முடிந்த அளவு இரிடேட் செய்கின்றனர்.

இதில் தீபக்கின் பேச்சு கூட சில விமர்சனமாக மாறி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கூட ஜாக்லின் கிளாஸ் எடுக்கும் போது சத்யா உள்ளிட்ட சிலர் வெளிநடப்பு செய்கின்றனர்.

சுவாரஸ்யம் இல்லாமல் நகரும் பிக்பாஸ்

இந்த சீசனின் கடுமையான போட்டியாளர்கள் என பார்க்கும்போது முத்துக்குமரன், ஜாக்லின், தீபக்பாஸ்யோர் முக்கிய இடத்தில் இருக்கின்றனர். இதில் ஆண்கள் குழு முத்துக்குமரனை கடந்த வாரமே தலையில் தட்டி ஓரமாக உட்கார வைத்து விட்டது.

அதேபோல் ஜாக்லின் மீது இருக்கும் வன்மத்தையும் ஆண்கள் குழு வெளிப்படுத்தி வருகிறது. அதே போல் இந்த வார டாஸ்க் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்கிறது.

இப்படியே சென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நிலைமை அவ்வளவுதான் இந்த சீசனோடு மூடு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால் இனி வரும் வாரங்களில் கடுமையான டாஸ்க் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

Trending News