சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வாரம் விஜய் சேதுபதி துரத்தி விடப் போகும் நபர்.. பிக்பாஸ் 8 ஓட்டிங் நிலவரம்

Biggboss 8: பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் சாச்சனா, ஆனந்தி இருவரும் வெளியேறினார்கள். அதை அடுத்து தற்போது ஒன்பது பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

biggboss 8
biggboss 8

அதில் இதுவரை இல்லாத அதிசயமாக பவித்ரா அதிக ஓட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார். கடந்த வாரம் நடந்த டாஸ்க் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம்.

அதன் மூலம் அவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி விட்டார். அதனால் ஆடியன்ஸ் இப்போது அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் அவருடைய விளையாட்டு யுக்தியும் சிறப்பாக இருக்கிறது. அதனாலேயே இந்த வாரம் அவர் முன்னிலை வகித்து வருகிறார்.

பிக்பாஸ் 8 ஓட்டிங் நிலவரம்

அவருக்கு அடுத்தபடியாக சவுந்தர்யா 19% ஓட்டுக்களை பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் தான் அதிகமான ஓட்டுக்களை தட்டி தூக்கியுள்ளனர்.

அதற்கு அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு குறைவான ஓட்டுகள் தான் உள்ளது. அதன்படி ஜாக்லின் 9.84% அருண் 9.68% பெற்றுள்ளனர்.

மேலும் அன்சிதா 8.39% ரயான் 7.94% சத்யா 7.86% விஷால் 7.62% ஓட்டுகளை பெற்றுள்ளனர். இதில் கடைசி இடம் தர்ஷிகாவுக்கு கிடைத்துள்ளது.

காதலால் தடுமாறி நிற்கும் இவர் தற்போது 6.53% ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளார்.. இப்படியாக கடைசி இடத்தில் இருக்கும் இவர்தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.

இதன் பிறகாவது விஷால் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் ஏற்கனவே டேமேஜ் ஆன பெயர் இன்னமும் மோசமாகிவிடும்.

Trending News