சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிக்பாஸ் டீமுக்கு வந்த பிரஷர்.. எலிமினேஷன் ட்விஸ்ட், எதிர்பாராததை எதிர்பாருங்கள்

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 9 வாரங்களை கடந்து விட்டது. ஆனால் இப்பொழுதுதான் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக போட்டியாளர்கள் கேமை ஆட தொடங்கி விட்டனர். இதில் கடந்த வாரம் சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

அதை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் டபுள் எவிக்சன் எப்போது என்ற கேள்வியும் உள்ளது.

இந்த வாரம் வெளியேறும் இரண்டு பேர்

அதிலும் தொடர்ந்து சாச்சனா காப்பாற்றப்பட்டு வருகிறார். குறைவான வாக்குகள் இருந்த போதிலும் கடந்த வாரம் அவர் சேவ் செய்யப்பட்டார்.

இதற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என ஆடியன்ஸ் கூறி வந்தனர். அதேபோல் விஜய் டிவி ஏதோ ஒரு வேலையை பார்க்கிறது என்ற விமர்சனமும் எழுந்தது.

இப்படி எல்லா பக்கம் இருந்தும் அழுத்தம் வந்த காரணமாக ஒரு முடிவை பிக் பாஸ் டீம் எடுத்துள்ளது. அதன்படி இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற இருக்கின்றனர்.

தற்போது ஓட்டு நிலவரம் கடைசி இரண்டு இடத்தில் சாச்சானா, ஆனந்தி இருக்கின்றனர். அதனால் அவர்களை வெளியேற்ற டீம் முடிவு செய்திருக்கிறது.

இன்று ஒருவர் வெளியேற நாளை ஒருவர் வெளியேற இருக்கிறார். தற்போது கசிந்துள்ள இந்த தகவல் ஆடியன்சை சந்தோஷப்படுத்தி இருக்கிறது.

Trending News