பிக்பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக எந்த சண்டையும் இல்லாமல் மிகவும் அமைதியாக இருக்கிறது. இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட கடுமையாக போட்டிகளுக்கு பிறகு இன்று மீண்டும் நாமினேஷன் நடைபெறுகிறது.
அதில் போட்டியாளர்கள் இரண்டு, இரண்டு பேராக வந்து தாங்கள் காப்பாற்ற விரும்பும் நபரின் போட்டோக்களை காட்ட வேண்டும். பிக்பாஸின் இந்த அறிவிப்பு படி போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்ற விரும்பும் நபர்களை கூறுகின்றனர்.
பின்னர் அதன் முடிவுகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அறிவிக்கிறார். அதில் அபிநய், பிரியங்கா, பவானி, வருண், அக்ஷரா, ராஜு ஆகியோர் நாமினேட் ஆனவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அப்போது ராஜு தன்னுடைய பெயரை அறிவிக்கும் முன்பே எழுந்து விடுகிறார்.
ஏனென்றால் சஞ்சீவின் மகள் பிக்பாஸ் வீட்டை பார்க்க வேண்டும் என்பதற்காக ராஜு சஞ்சீவை காப்பாற்றிவிட்டு தன்னை நாமினேட் செய்து கொண்டார். அவரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதேபோல் பவானியும் அமீரை காப்பாற்றினார்.
இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட இந்த ஆறு பேரில் பிரியங்கா மற்றும் ராஜூவுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். அவர்களை தொடர்ந்து பவானி, அக்ஷரா, வருண் இவர்களும் கணிசமான ஓட்டுகளை பெற்று நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள்.
ஆனால் பல நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக தராமல் இருக்கும் போட்டியாளர் என்றால் அது அபிநய் மட்டும்தான். பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் அவர் மற்ற போட்டியாளர்கள் அளவுக்கு அதிக ஈடுபாடு காட்டவில்லை.
இதுநாள் வரை அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்து வந்தது மிகவும் ஆச்சரியமான ஒன்று. ஆனால் இந்த வாரம் நாமினேஷனில் முக்கியமான மற்றும் கடுமையான போட்டியாளர்கள் நிறைய பேர் இருப்பதால் அபிநய் நிச்சயம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.