திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கடைசியா வாயாடியை தூக்கிய பிக் பாஸ்.. உறுதியாக வெளியேறும் இந்த வார போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவு பெற உள்ளதால் இந்நிகழ்ச்சி தற்போது பலரின் ஆர்வத்தையும் தூண்டி உள்ளது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்குள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர்.

அதில் நாமினேஷனின் கடைசி வாரமான இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்து வருகிறது. இதில் குறைந்த ஓட்டுகளின் அடிப்படையில் பவானி மற்றும் தாமரைச்செல்வி இருவரும் தற்போது கடைசி இடத்தில் இருந்து வருகின்றனர்.

இதனால் இவர்கள் இருவரில் பவானி ரெட்டி தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தாமரைச்செல்வி எலிமினேட் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அவர் விளையாட்டை பற்றிய புரிதல் இல்லாமல் தடுமாறினாலும், போகப்போக அனைத்துப் போட்டிகளிலும் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்தார். இதனால் அவர் நிச்சயம் பைனல் போட்டிக்கு செல்வார் என்று பலரும் நினைத்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது தாமரைச்செல்வி பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளது பலருக்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 12 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை வைத்தபோது கூட அதை எடுக்காத தாமரைச்செல்வி நான் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு செல்வேன் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால் அவரது நம்பிக்கை தற்போது பொய்யாகி விட்டது. பவானியை விட ஒரு சில ஓட்டுக்கள் குறைவாக பெற்று தாமரைச்செல்வி கடைசி இடத்தில் இருந்த காரணத்தால் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். ஒரு மேடை நாடக கலைஞர் பைனல் போட்டிக்கு வர வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருந்த தாமரையின் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Trending News