செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் தொடை நடுங்கி.. லீக்கான ஓட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் அந்த போட்டியாளர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்தது விடும்.

கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் இந்த வாரம் அமீர் கோல்டன் டிக்கெட்டை பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக சென்று விட்டதால், மீதம் இருக்கும் ராஜு, பிரியங்கா, சிபி, பவானி ரெட்டி, தாமரை, நிரூப் ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் சஞ்சீவ் வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற ஆவல் அனைவரிடமும் அதிகரித்து வருகிறது. அதில் இவர் தான் வெளியேறுவார் என்ற கருத்து கணிப்பும் இணையதளத்தில் உலா வருகிறது.

இந்நிலையில் தற்போது இணையதளத்தில் யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைத்துள்ளது என்ற ஓட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் அமோக ஆதரவுடன் எப்போதும் அதிக ஓட்டுக்களை பெற்று வரும் ராஜு இந்த வாரமும் அதிக ஓட்டுகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்து பிரியங்கா, சிபி, தாமரை ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். கடைசி இரண்டு இடத்தை பவானி ரெட்டி மற்றும் நிரூப் பிடித்துள்ளனர். இதில் நிரூப், பவானியை விட ஒரு சில ஓட்டுகள் குறைவாக பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்.

ஒவ்வொரு வாரமும் கடைசி ஆளாக காப்பாற்றப்படும் போது நிரூப்புக்கு எலிமினேஷன் பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது. அவர் பயந்தது போலவே இந்த வாரம் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். இருப்பினும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News