ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

இது என்ன பிக்பாஸ் ரெஸ்டாரண்டா? கெட் அவுட்.. அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்

Biggboss 7: கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு பலரும் எதிர்பார்த்த ஐசு வெளியேறி இருந்தார். அதை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற ஒரு ஆவலும் இருந்தது. ஏனென்றால் வீட்டில் பல பேர் எதற்கு வந்தோம் என தெரியாமல் சாப்பிடுவது, தூங்குவது என பொழுதைப் போக்கி வருகின்றனர்.

அவர்களை எல்லாம் அடுத்தடுத்து வெளியேற்றும் முடிவில் இப்போது பிக்பாஸ் தீவிரமாக இருக்கிறார். அந்த வகையில் இந்த வாரம் மிக்சர் சரவணன் தான் வெளியில் வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு அவர் கடுப்பேற்றும் போட்டியாளராக இருக்கிறார். யாராவது பேசினால் இடையில் நின்று கொண்டு ஆமாம் சாமி போடுவது.

காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஊட்டுவது, பெண்களோடு கூட்டு சேர்ந்தது என அவர் அட்ராசிட்டி அதிகமாகவே இருந்தது. இதனாலேயே பிக்பாஸ் அவரை கதவை மூடும் வாட்ச்மேன் போல் பயன்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கானா பாலா வெளியேறியுள்ளார்.

Also read: பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. மாட்டிகிட்டியே பங்கு, நிக்சனை ரோஸ்ட் செய்த ஆண்டவர்

இன்று காலை முதல் வெளிவந்த ப்ரோமோக்களில் கமல் போட்டியாளர்களை ரோஸ்ட் செய்வதை நாம் பார்த்தோம். அதை தொடர்ந்து கானா பாலாவின் வெளியேற்றமும் நடந்திருக்கிறது. இது நாளைய எபிசோடில் ஒளிபரப்பாகும். இவரும் ஒரு விதத்தில் மிக்சர் போட்டியாளர் தான்.

பிக் பாஸ் வீட்டில் இவர் எந்த பரபரப்பான கண்டன்ட்டையும் இதுவரை தரவில்லை. ஏதோ கெஸ்ட் ரோல்க்கு கூப்பிட்டது போல் தான் இவர் இருக்கிறார். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட இவருடைய இருப்பு ஒரு புள்ளியாக தான் தெரிகிறது.

அதனாலயே பிக்பாஸ் இது என்ன ரெஸ்டாரன்ட்டா நீங்க சொகுசா சாப்பிடுவதற்கு என கடுப்பாகி ஒவ்வொருவரையும் வெளியேற்றி வருகிறார். அந்த வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த ஐந்து பேரில் ஏற்கனவே அன்னபாரதி வெளியேறி இருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டும் காலியாகி உள்ளது.

Also read: பிக் பாஸுக்கு ரெட் கார்டு கொடுக்கப் போகும் கமல்.. ஆண்டவருக்கு உமன் சேஃப்டி தான் முக்கியம்

Trending News