Theater OTT Release: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளிவந்து தியேட்டர்களை கலக்கியது. அதை தொடர்ந்து இந்த வாரமும் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் 8 முக்கிய படங்கள் வெளிவருகிறது.
அதில் தியேட்டரை பொறுத்தவரையில் மணிகண்டன் நடிப்பில் உருவாகி இருக்கும் குடும்பஸ்தன் வரும் 24ம் தேதி வெளியாகிறது.
முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்றது. அதை அடுத்து யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் குழந்தைகள் முன்னேற்ற கழகம் 24ஆம் தேதி வெளியாகிறது.
குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன்
மேலும் டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளிவந்த மலையாள படமான ஐடென்டிட்டி நல்ல வரவேற்பை பெற்றது. அதனுடைய தெலுங்கு வெர்ஷன் 24ஆம் தேதி வெளியாகிறது.
அதை தொடர்ந்து டிஜிட்டலை பொறுத்தவரையில் விடுதலை 2 அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதேபோல் அன்புமணி ராமதாஸின் மகள் தயாரித்திருந்த அலங்கு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த திரு மாணிக்கம் ஜீ 5 தளத்தில் 24ஆம் தேதி வெளியாகிறது. சரத்குமார் நடிப்பில் வெளியான தி ஸ்மைல் மேன் ஆஹா தமிழ் தளத்தில் 24ஆம் தேதி வெளியாகிறது.
அதைத்தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளியான பரோஸ் மலையாள படம் தெலுங்கு தமிழ் கன்னடா ஆகிய மொழிகளிலும் சேர்த்து 22 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
இப்படியாக இந்த வாரம் பல படங்கள் வெளியாகிறது. இதில் மணிகண்டனின் குடும்பஸ்தன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.