ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

6 வாரங்களாக தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் பிரபலம்.. சோனமுத்தா போச்சா

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதற்காக வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என நினைக்கும் 3 நபரை ஒவ்வொரு போட்டியாளர்களும் தேர்வு செய்ய வேண்டும்.

அப்படி தயாரான இந்த வார நோமினேஷன் லிஸ்ட் தற்போது ரெடியாகி உள்ளது. இதில் ஐக்கி பெர்ரி, அபினை, இசை, பாவனி, சிபி, இமான், தாமரை, நிரூப், அக்ஷரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் வாரத்திலிருந்து தற்போதைய ஆறாவது வரை தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒரே நபர் அபினை.

ஏனென்றால் அபினை ஒவ்வொரு முறையும் நாமினேஷன் செய்யப்பட்ட விளிம்பில் காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் சுவாரசியம் குறைந்த போட்டியாளராக கருதப்பட்ட அபினை தற்போதுதான் விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளார். ஆனால் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் கண்டெண்ட் குறைந்த போட்டியாளராகவே கருதப்படுகிறார்.

இவர் ஜெமினிகணேசன்-சாவித்ரி அவர்களின் பேரன் அபினை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பங்களிப்பை கூடுதலாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவற்றை நிறைவேற்ற அபினை தொடர்ந்து முயற்சிகளை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அபினை பிக்பாஸ் வீட்டில் தான் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் சில சமயம் ரசிகர்களுக்கு எழத்தோன்றும். அந்த அளவிற்கு தன்னுடைய பங்களிப்பை குறைவாக அபினை காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆகையால் வரும் வாரத்தில் அபினை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது இருப்பினும் இந்த வாரம் அபினை ஏதாவது செய்து மக்கள் மனதைக் கவர்ந்து எலிமினேஷனிலிருந்து தப்பிக்க பிளான் போட்டு செயல்பட்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News