வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

ரெடியானது இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்.. அடுத்து பொட்டியை கட்ட போகும் கேமரா பைத்தியம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது 50 நாட்களை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியானது கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னும் 50 நாட்களில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால், ரசிகர்களும் யார் யார் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் யார் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று தங்கள் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு வாரம் முதல் நாளான திங்கட்கிழமை அன்று நாமினேஷன் லிஸ்ட் ரெடி ஆகும். அந்தவகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் நேற்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஐக்கி பெர்ரி, பிரியங்கா, தாமரைச்செல்வி, பாவனி, இமான் அண்ணாச்சி, நிரூப் ஆகிய ஆறு பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். எனவே இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஐக்கி பெர்ரிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் ஐக்கி பெர்ரி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் பேசுவதை விட பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராக்களில் மட்டுமே அதிக நேரத்தை செலவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். அத்துடன் அவர் பிக்பாஸ் வீட்டில் குறைந்த அளவு பங்களிப்பை அளித்து கொண்டிருக்கிறார்.

மேலும் சுவாரசியம் குறைந்து நபராக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஐக்கி பெர்ரி கடந்த வாரம் நடந்த எலிமினேஷன் இன் போது கடைசி நபராக காப்பாற்றப்பட்டுள்ளார். அத்துடன் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இருந்து கொண்டு கடைசி நபராக காப்பாற்றப்படும் அபினை இந்தவாரம் கேப்டன் பதவியை நிலைநாட்டி நாமினேஷன் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார்.

ஆகையால் ஐக்கி பெர்ரி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் என்று சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட அடித்து கொண்டிருக்கின்றனர்.

Trending News